அவர் விளையாடும் விதத்துக்கு சீக்கிரம் ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடிப்பாரு பாருங்க – இந்திய வீரரை பாராட்டும் கவாஸ்கர்

Gavaskar
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக 2023 புத்தாண்டில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் களமிறங்குகிறது. அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை வென்றால் தான் 2023 ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் இந்தியா களமிறங்க உள்ளது. அத்துடன் 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை 2011க்குப்பின் வென்று சரித்திரம் படைக்குமா என்ற எதிர்பார்ப்பும் இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

IShan Kishan

- Advertisement -

இருப்பினும் அந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் துணை கேப்டன் என்பதற்காக தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று தடவலாக செயல்பட்டு வரும் ராகுல் விளையாடினால் இந்தியா கோப்பையை வெல்ல முடியாது என்று தெரிவிக்கும் ரசிகர்கள் சமீபத்திய வங்கதேச ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்து சாதனை படைத்த இசான் கிசான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள். குறிப்பாக வங்கதேச ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை பெற்று அவமானத்தை சந்தித்த இந்தியா கடைசி போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட ஆறுதல் வெற்றி பெறுவதற்கு 210 ரன்கள் விளாசிய இஷான் கிசான் ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார்.

சீக்கிரம் 300 அடிப்பாரு:
அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் அதிவேகமாக இரட்டை சதமடித்த வீரர் என்ற இரட்டை உலக சாதனைகளை படைத்த அவர் 40 ஓவருக்குள் ஆட்டமிழந்தார். இருப்பினும் கடைசி வரை அவுட்டாகாமல் விளையாடியிருந்தால் தம்மால் 300 ரன்கள் அடித்திருக்க முடியும் என்று போட்டியின் முடிவில் ஆதங்கத்தை வெளிப்படுத்திய அவருடைய தன்னம்பிக்கையை பல ரசிகர்கள் வியந்து பாராட்டினார்கள். ஏனெனில் தற்போது தடவலாக செயல்பட்டு வரும் இந்திய அணிக்கு அவரது போன்ற அதிரடியான அணுகு முறையில் விளையாடும் வீரர்கள் தான் தேவைப்படுகிறார்கள்.

Ishan Kishan 1

இந்நிலையில் 2022இல் சிறந்து விளங்கிய இந்திய வீரர்களில் இசான் கிசானும் ஒருவர் என்று பாராட்டியுள்ள ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அவர் விளையாடும் விதத்துக்கு விரைவில் 300 ரன்களை அடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “நிறைய இளம் வீரர்கள் விளையாட வரும் போது நம்முடைய இந்திய அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்ற நம்பிக்கை வருகிறது. இஷான் கிசான் இந்த வருடம் உயர்ந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியவராக திகழ்ந்தார். குறிப்பாக 50 ஓவர் கிரிக்கெட்டில் இரட்டை சதமடிப்பது மிகச்சிறந்த சாதனையாகும்”

- Advertisement -

“இருப்பினும் அவர் எளிமையாக அதுவும் 35 – 36வது ஓவரில் அவுட்டாகி விட்டார். ஒருவேளை அப்போட்டியில் தொடர்ந்து அவர் விளையாடியிருந்தால் நிச்சயமாக ஒருநாள் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் வீரராக சாதனை படைத்திருப்பார். ஆனாலும் தற்போது அவர் பேட்டிங் செய்யும் விதத்துக்கு வருங்காலங்களில் அது நிச்சயமாக நடக்கும். அது இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதகமான அம்சமாகும். மிகச் சிறந்த வீரரான அவர் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடிக்கும் திறமை பெற்றுள்ளார். குறிப்பாக ஸ்கொயர் கட் ஷாட்டை சிறப்பாக விளையாடும் அவர் ரிஷப் பண்ட் போல நமது அணியில் சூழ்நிலைக்கு அஞ்சாமல் காரமாக அடிக்கும் திறமை கொண்டவர்”

Gavaskar

இதையும் படிங்க: வீடியோ : தேவையா இது? கொண்டாட்டத்தால் காயமடைந்து சென்ற வார்னர் – உண்மை பின்னணி இதோ

“அதே சமயம் அவர் இந்த வயதிலேயே 200 ரன்கள் அடித்ததே மிகப்பெரிய சாதனையாகும். எனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இதுவரை வெளிப்படுத்திய செயல்பாடுகளை வைத்து அவருக்கு வானம் தான் எல்லையாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த ரோகித் சர்மா போன்ற நட்சத்திரங்கள் தற்போது 35 வயதை கடந்து சுமாராக செயல்படுகிறார்கள். அதனால் 24 வயது இளம் ரத்தமாக இருக்கும் இசான் கிசான் வருங்காலங்களில் தன்னுடைய உச்சத்தை எட்டும் போது நிச்சயமாக முச்சதம் அடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்றே கூறலாம்.

Advertisement