தோனி மட்டும் இல்ல. யாரையும் குறை சொல்ல விரும்பல – ஆரம்பகால கேரியர் பற்றி மனம் திறக்கும் டிகே

Advertisement

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதைத்தொடர்ந்து இத்தொடரின் கடைசி 2 போட்டிகள் ஆகஸ்ட் 6, 7 ஆகிய அடுத்தடுத்த நாட்களில் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் நடைபெறுகிறது. முன்னதாக இந்த தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் முடிந்தளவுக்கு மிகச் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

Dinesh Karthik vs RSA

கடந்த 2004இல் தனது 19 வயதிலேயே இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமான இவருக்கு அதே வருடம் அறிமுகமாகி அதிரடியான பேட்டிங் மின்னல்வேக விக்கெட் கீப்பிங் செய்ததுடன் கேப்டனாகவும் அவதரித்து 3 உலகக் கோப்பைகளை வென்ற எம்எஸ் தோனி இருந்ததால் தொடர்ச்சியான வாய்ப்புகளும் ஆதரவும் கிடைக்காமல் போனது. கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையில் விளையாடிய அவரை அதன்பின் தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்ட அவர் கடந்த 2021இல் வர்ணனையாளராக அவதாரம் எடுத்ததார்.

- Advertisement -

அதனால் அவரின் இந்திய கிரிக்கெட் கேரியர் முடிந்ததாக அனைவரும் நினைத்தாலும் தம்மால் டி20 கிரிக்கெட்டில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கடினமாக உழைத்து ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக லோயர் மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் களமிறங்கி 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் 3 – 4 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக் கொடுத்து தன்னை மிகச்சிறந்த பினிஷர் என்று நிரூபித்தார்.

MS Dhoni vs DInesh Karthik

தோனி மீது குற்றம்:
அதனால் 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்த அவர் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரிலும் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு 37 வயதுக்குப் பின் 2 ஆட்ட நாயகன் விருதுகளையும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனைகளுடன் அசத்தி வருகிறார். இதனால் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இப்படி இந்த வயதில் அவர் சிறப்பாக செயல்படுவதை பார்க்கும் பல ரசிகர்கள் தோனியை விட இவர் சிறந்தவர் என்றும் அவர் இருந்ததால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

- Advertisement -

ஆனால் 2007 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் நடந்த உலக கோப்பைகளை வென்ற இந்திய அணியில் இவரை தோனி தேர்வு செய்து கணிசமான வாய்ப்புகளை கொடுத்திருந்தார். இருப்பினும் விக்கெட் கீப்பராக தாமும் ரோகித் சர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்ததால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. மேலும் கொடுத்த வாய்ப்புகளிலும் அவர் சுமாராகவே செயல்பட்டார் என்பதும் நிதர்சனமான உண்மையாகும். எடுத்துக்காட்டாக 2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியை கூறலாம்.

Dinesh-Karthik-1

நல்லா ஆடிருக்கணும்:
சொல்லப்போனால் கடந்த 2018இல் இலங்கையில் நடைபெற்ற நிதியாஸ் கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தது முதல் தான் தினேஷ் கார்த்திக்கின் உண்மையான கேரியர் எழுச்சி கண்டது. அதிலிருந்துதான் முற்றிலும் மாறுபட்ட வீரராக ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடரில் அசத்தி தற்போது இந்திய அணியில் சிறப்பாக செயல்படுகிறார். இந்நிலையில் இப்போது போல ஆரம்ப காலங்களில் சிறப்பாகவும் செயல்படவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ள தினேஷ் கார்த்திக் அதற்காக யாரையும் குறை கூறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஆரம்ப காலங்களில் அதிரடியாக விளையாட தவறியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியது பின்வருமாறு. “பவர் ஹிட்டிங் என்ற அம்சத்தில் சிறப்பாக செயல்படுவதற்காக நிறைய உழைத்துள்ளேன். எனது கேரியரில் நான் அதை சற்று முன்னதாகவே செய்திருக்க வேண்டும். ஆனால் இப்போதைக்கு அது நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. தற்போதைய அணியில் எனக்கு ஆதரவு கிடைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

Dinesh-Karthik

இதைத்தான் எனது வாழ்நாள் முழுவதிலும் நான் குறிக்கோளாக வைத்துள்ளேன். மேலும் என் மீது நம்பிக்கை வைத்துள்ள கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு எனக்கு ஆட்டத்தின் வாயிலாக திருப்தியை கொடுப்பதே நியாயமானது. இது இந்திய அணிக்கும் பல வகைகளில் உதவும்” என்று கூறினார்.

இதையும் படிங்க : ஐசிசி 2023 உலககோப்பைக்கு பின் ஓய்வு பெறக்கூடிய 4 ஸ்டார் இந்திய வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

இத்துடன் தற்போதைய இந்திய அணியில் ஒரு சில போட்டிகளில் தடுமாறினாலும் அந்த வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக வாய்ப்பளிக்கப்படுவதாக தெரிவிக்கும் தினேஷ் கார்த்திக் அதுவே முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும் இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போடுவதற்கு காரணம் என்றும் அணி நிர்வாகத்தை பாராட்டியுள்ளார்.

Advertisement