அக்டோபர் 14 யார் நினைவில் வெச்சுப்பாங்க? பாகிஸ்தான் செய்யும் அதே தப்பை நாமும் செய்றோம்.. கம்பீர் அதிருப்தி

Gautam Gambhir
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா 6வது முறையாக தட்டி சென்றது. மறுபுறம் ரோகித் சர்மா தலைமையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்ததால் 2011 போல சொந்த மண்ணில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் இறுதிப்போட்டியில் பேட்டிங்கில் வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா தோல்வியை சந்தித்தது கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.

இருப்பினும் இத்தொடரில் பரம எதிரி பாகிஸ்தானை தோற்கடித்தது, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, முரட்டுத்தனமாக விளையாடி வந்த தென்னாப்பிரிக்காவை 83 ரன்களுக்கு சுருட்டியது, இலங்கையை 55 ரன்களுக்கு ஓட விட்டது, செமி ஃபைனலில் நியூசிலாந்தை முதல் முறையாக வீழ்த்தியது போன்ற இந்தியாவின் வெற்றிகள் மறக்க முடியாததாக அமைந்தது. இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக பதிவு செய்த வெற்றியை இந்தியா கோப்பையை வென்றது போல் கொண்டாடியதாக கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

கம்பீர் அதிருப்தி:
பொதுவாக உலகக் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை இந்தியாவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பாகிஸ்தான் விளையாடுவது வழக்கமாகும். அதே போல இப்போதெல்லாம் உலகக்கோப்பை வெல்வதை விட பாகிஸ்தானை தோற்கடிப்பது முக்கியம் என்று இந்தியர்கள் நினைப்பதாக அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“பாகிஸ்தானுக்கு எதிராக வெல்வது முக்கியம். மற்ற அணிகளுக்கு எதிராக வெல்வதும் முக்கியம். ஆனால் உலகக்கோப்பை வெல்வது அவை அனைத்தையும் விட முக்கியமாகும். எத்தனை பேர் இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த அக்டோபர் 14ஆம் தேதியை நினைவில் வைத்திருப்பார்கள்? யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள். மாறாக ஆஸ்திரேலியா கோப்பையை வென்றதையே அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் என்பதே உண்மையாகும்”

- Advertisement -

“மக்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது நிதர்சனமாக இருக்கிறது. நீங்கள் உலகக் கோப்பையை வெல்வதற்கான பாதையில் பாகிஸ்தானை தோற்கடித்தீர்கள். ஆனால் ஒரு நாடாக, ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக வெல்கிறீர்களா என்பது முக்கியமல்ல. உலகக் கோப்பையை வெல்வதே அவசியமாகும். ஏனெனில் அது தான் ஒட்டுமொத்த மக்களுக்கும் நீங்காத நினைவுகளையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்”

இதையும் படிங்க: 2023 உலகக் கோப்பையில் நடந்த ஒரே நல்ல விஷயம் அது தான்.. சமமா பாராட்டுங்க.. கம்பீர் அதிரடி கருத்து

“2007 உலகக்கோப்பை ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக நான் களத்தில் இருக்கும் வரை இந்தியா பாதுகாப்பாக வெல்லும் என்ற நம்பிக்கையுடன் விளையாடினேன். அந்த நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றால் நீங்கள் நாட்டுக்காக விளையாட தேர்வு செய்யப்படக்கூடாது. ஏனெனில் நீங்கள் நாட்டுக்காக மட்டுமல்லாமல் 140 கோடி இந்தியர்களுக்காகவும் விளையாடுகிறீர்கள்” என்று கூறினார்.

Advertisement