அந்த வெற்றி உலக கோப்பைக்கு சமம்.. எப்படியாவது ஜெயிச்சுட்டு வாங்க.. இந்திய அணிக்கு ஸ்ரீசாந்த் கோரிக்கை

Sreesanth 4
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்ற இந்தியா இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் சந்தித்த தோல்வி ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகமாக அமைந்தது. அதனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்ட இந்தியா அடுத்ததாக 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை துவங்கியுள்ளது.

அதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா 4 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியது. அதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்தியா அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது.

- Advertisement -

உலகக் கோப்பைக்கு சமம்:
இந்நிலையில் இந்த சுற்றுப்பயணத்தில் கடைசியாக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வென்றால் அது உலகக் கோப்பைக்கு சமமான வெற்றியாக இருக்கும் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த சுற்றுப்பயணத்தில் இந்தியா டெஸ்ட் தொடரை வெல்வதை நான் பார்க்க விரும்புகிறேன்”

“அது உலகக் கோப்பை வெல்வதைப் போன்ற உணர்வை கொடுக்கும். ஏனெனில் தென்னாப்பிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் இம்முறை நம்மால் அதை சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன்” என கூறினார். அத்துடன் ந்த தொடரில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு சவாலாக இருந்து இந்திய அணியின் வெற்றிக்கான துருப்புச் சீட்டாக இருப்பார் என்றும் ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

- Advertisement -

அவர் இப்படி சொல்வதற்கான காரணம் என்னவெனில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற சவாலான வெளிநாடுகளில் வரலாற்றில் குறைந்தபட்சம் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரையாவது வென்றுள்ளது. ஆனால் தென்னாப்பிரிக்காவில் மட்டும் 1992 முதல் இதுவரை விளையாடிய அனைத்து தொடர்களிலும் இந்தியா தோல்வி அல்லது சமன் மட்டுமே சந்தித்துள்ளது.

இதையும் படிங்க: கொஞ்சம் அசந்துருந்தா பாண்டியா மாதிரி அவரையும் தூக்கிருப்பாங்க.. பிசிசிஐக்கு குஜராத் இயக்குனர் கோரிக்கை

குறிப்பாக 2010இல் தோனி தலைமையில் 1 – 1 (3) என்ற கணக்கில் போராடி தொடரை சமன் செய்த இந்தியா கடைசியாக விராட் கோலி தலைமையில் 2021இல் விளையாடிய போது முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் விராட் கோலி காயமடைந்து வெளியேறியதை பயன்படுத்திய டீன் எல்கர் தலைமையிலான இளம் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை தோற்கடித்து 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்றி சொந்த மண்ணில் எங்களை வீழ்த்த முடியாது என்பதை காண்பித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement