கொஞ்சம் அசந்துருந்தா பாண்டியா மாதிரி அவரையும் தூக்கிருப்பாங்க.. பிசிசிஐக்கு குஜராத் இயக்குனர் கோரிக்கை

Gujarat COO
- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் துபாயில் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு முன்பாக டிரேடிங் முறையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் வலுக்கட்டாயமாக வாங்கியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 2015இல் தம்முடைய ஐபிஎல் பயணத்தை மும்பை அணியில் துவக்கிய ஹர்திக் பாண்டியா குறுகிய காலத்திலேயே முதன்மை வீரராக உருவெடுத்தார்.

அந்த வகையில் 2021 வரை மும்பை 4 கோப்பைகளை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்திய அணியிலும் அறிமுகமாகி சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அசத்தினார். இருப்பினும் அதன் பின் சந்தித்த காயத்தால் மும்பை அணியில் கழற்றி விடப்பட்ட அவரை 15 கோடிக்கு வாங்கிய குஜராத் தங்களுடைய கேப்டனாக நம்பி நியமித்தது.

- Advertisement -

தடை பண்ணுங்க:
அந்த வாய்ப்பில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று கொடுத்த பாண்டியா 2வது இடத்தில் குஜராத்தை ஃபைனல் வரை அழைத்துச் சென்று இன்று இந்தியாவின் அடுத்த கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அப்படிப்பட்ட அவரை ட்ரேடிங் முடியும் கடைசி நாளில் மாலை 5.25 மணிக்கு குஜராத் தக்க வைத்த போதிலும் இரவு 7.25 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் வலுக்கட்டாயமாக வாங்கியது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாண்டியாவைப் போலவே கடந்த வருடம் அபாரமாக பந்து வீசி அதிக விக்கெட்களை எடுத்து ஊதா தொப்பியை வென்ற முகமது ஷமியையும் வாங்குவதற்கு சில அணிகள் முயற்சித்ததாக குஜராத் அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் அர்விந்தர் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே வருங்காலங்களில் ஒரு அணியில் உள்ள வீரரை அந்த அணி நிர்வாகத்தின் அனுமதியின்றி மற்ற அணி வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அனைத்து அணிகளும் தங்களை வலுப்படுத்த டாப் வீரரை வாங்குவதற்கான உரிமைகளைக் கொண்டுள்ளன. முகமது ஷமி கடந்த சீசனில் எங்களுக்காக சிறப்பாக விளையாடி ஊதா தொப்பியை உலகக் கோப்பையிலும் சிறப்பாக விளையாடினார். அவர் எங்களுடைய அணியின் மிகவும் முக்கியமான வீரர். ஆனால் அதற்காக ஒரு ஐபிஎல் அணி அணியில் இருக்கும் வீரரிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் தவறான அணுகுமுறையாகும்”

இதையும் படிங்க: கம்பீர் அந்த வார்த்தையை சொல்லி திட்டுனாரு.. நேரலையில் உண்மையை ஆதங்கத்துடன் பகிர்ந்த ஸ்ரீசாந்த்

“இந்த தவறான அணுகுமுறையால் குஜராத் அணி நிர்வாகம் அதிருப்தியில் உள்ளது. எனவே டிரேடிங் சம்பந்தமான விதிமுறைகள் பற்றி முதலில் பிசிசிஐ எங்களுக்கு தெரிவித்த பின்னரே எதிரணி முடிவெடுக்கும் முறையை கொண்டு வர வேண்டும்” என்று கூறினார். முன்னதாக கொல்கத்தா அணியின் முன்னாள் இயக்குனர் ஜோய் பட்டாச்சாரியாவும் இந்த விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement