சச்சின் மாதிரியே டார்ச்சர் பண்ணா உ.கோ கிடைக்காது பரவால்லயா.. இந்திய ரசிகர்களை எச்சரித்த நாசர் ஹுசைன்

nasser Hussain 5
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக மும்பையில் நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா உலகக்கோப்பை தங்களுடைய மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 88, கில் 92, ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்த உதவியுடன் 358 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதை துரத்திய இலங்கை படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. அந்த அணிக்கு அதிகபடுத்தமாக கவுசன் ரஜிதா 14 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, முகமது சிராஜ் 4 விக்கெட்களை சாய்த்தனர்.

- Advertisement -

நாசர் ஹுசைன் அதிருப்தி:
முன்னதாக அப்போட்டியில் 88 ரன்கள் எடுத்த விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (49) அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவருடைய சொந்த ஊரில் சமன் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 12 ரன்னில் அவுட்டான அவர் இந்த உலகக் கோப்பைக்குள் 50 சதங்கள் அடித்து சச்சினின் உலக சாதனையை முறியடிக்க வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

இந்நிலையில் சச்சினின் சாதனை உடைக்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பது விராட் கோலிக்கு எக்ஸ்ட்ரா அழுத்தத்தை கொடுப்பதாக நாசர் ஹுசைன் அதற்கு வெளிப்படுத்தியுள்ளார். எனவே விராட் கோலி சதமடிப்பதை விட இந்தியா கோப்பையை வெல்வதே முக்கியம் என்பதை ரசிகர்கள் உணர வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “உலக கோப்பையை வெல்வதே அனைத்தையும் விட முக்கியம் என்று நான் சொல்வேன்”

- Advertisement -

“நிச்சயமாக விராட் கோலி 49, 50 அல்ல சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடிப்பார். ஆனால் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே முக்கியம். எனவே இந்தியா விராட் கோலியின் 49வது சதத்திற்கு பில்டப் செய்யக்கூடாது. சச்சின் இதைப் பற்றி பேசியது எனக்கு நினைவிருக்கிறது. அதாவது 99லிருந்து 100வது சதத்தை நோக்கி செல்லும் போது ஹோட்டலில் வேலை செய்பவர்கள் கூட இன்று நீங்கள் 100வது சத்தத்தை அடிப்பீர்களா? என்று கேட்டதாக என்னிடம் சொன்னார்”

இதையும் படிங்க: எதிரணி பேட்ஸ்மேன்களை கண்ணீர் விட வெச்சுடுட்டாரு.. இந்திய வீரரை வியந்து பாராட்டிய மேத்தியூ ஹெய்டன்

“மேலும் அந்த அழுத்தங்களிலிருந்து சச்சின் தன்னை மறைத்துக் கொண்டார். ஆனாலும் அவர் 99 முதல் 100 அடிக்கும் வரை அந்த சத்தம் மட்டுமே கேட்க முடிந்தது. எனவே விராட் கோலியால் அந்த சத்தத்தை இன்னும் சில வாரங்களில் மறைக்க முடியும் என்று நம்புகிறேன்” என கூறினார். இதை தொடர்ந்து நவம்பர் 5ஆம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தன்னுடைய பிறந்த நாளில் விராட் கோலி சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement