எதிரணி பேட்ஸ்மேன்களை கண்ணீர் விட வெச்சுட்டாரு.. இந்திய வீரரை வியந்து பாராட்டிய மேத்தியூ ஹெய்டன்

Matthew Hayden
- Advertisement -

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 88, ஸ்ரேயாஸ் ஐயர் 82, கில் 92 ரன்கள் எடுத்த உதவியுடன் 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை சேசிங் செய்த இலங்கை 2023 ஆசிய கோப்பை ஃபைனல் போலவே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்க பிடிக்க முடியாமல் வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்து இத்தொடரிலிருந்து வெளியேறியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் தெறிக்க விட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

ஹெய்டன் பாராட்டு:
இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்த முகமது ஷமி ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தனைக்கும் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த அவர் பாண்டியா காயமடைந்ததால் கிடைத்த வாய்ப்பில் நியூசிலாந்துக்கு எதிராக 5, இங்கிலாந்துக்கு எதிராக 4, இலங்கைக்கு எதிராக 5 என வெறும் 3 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை சாய்த்து எதிரணிகளை தெறிக்க விட்டு வருகிறார் என்று சொல்லலாம்.

அதனால் உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பவுலர் என்ற ஜஹீர் கான், ஸ்ரீநாத் (தலா 44) ஆகியோரது சாதனைகளையும் உடைத்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். இந்நிலையில் ஷமி வந்ததும் இந்தியாவின் பவுலிங் அட்டாக் எதிரணி பேட்ஸ்மேன்களை கண்ணீர் விட வைக்கும் அளவுக்கு மிரட்டலாக மாறியுள்ளதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹெய்டன் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஷமி மிகச் சிறப்பாக பந்து வீசுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “முகமது ஷமி மீண்டும் அணிக்குள் வந்தததிலிருந்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கண்ணீரை தவிர வேறு எதுவுமில்லை. அவர் தன்னுடைய மிகவும் எளிமையான பந்து வீச்சால் தனது வழியை செதுக்கியுள்ளார். இதில் எந்த மர்மமும் இல்லை. ஏனெனில் அவர் தன்னுடைய மணிக்கட்டை பயன்படுத்தி ஸ்டம்ப் லைனை நோக்கி மிகவும் அழகாக வீசுகிறார்”

இதையும் படிங்க: எதிரணி பேட்ஸ்மேன்களை கண்ணீர் விட வெச்சுடுட்டாரு.. இந்திய வீரரை வியந்து பாராட்டிய மேத்தியூ ஹெய்டன்

“ஒருவேளை அதை செய்ய முடியாமல் போனால் அவர் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து நகர்த்துகிறார். இது மிகவும் கச்சிதமானது. இந்த உலகக்கோப்பையில் நாம் அடிக்கடி பேட்ஸ்மேன்களை பற்றி பேசுகிறோம். ஆனால் பந்து வீச்சில் முகமது ஷமி அபாரமாக செயல்பட்டு வருகிறார்” என்று கூறினார். முன்னதாக ஷமி வந்ததும் இந்தியாவின் பவுலிங் அட்டாக் இறக்கமற்றதாக மாறியுள்ளதாக பாராட்டிய சோயப் அக்தர் இனிமேல் இந்திய ரசிகர்கள் பவுலர்களையும் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement