நல்லவேள அவங்கள ஃபேஸ் பண்ணாதது எங்களோட அதிர்ஷ்டம்.. எங்களுக்கும் ஹெல்ப் பண்றாங்க.. ஸ்ரேயாஸ் பேட்டி

Shreyas Iyer 2
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை தெறிக்க விட்ட இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பையில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 88, கில் 92, ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்த உதவியுடன் 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய இலங்கை 19.4 ஓவரில் வெறும் 55 ரன்களில் அவுட்டாகி தோல்வியை சந்தித்து இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது. அந்த அணிக்கு பவுலிங்கில் அதிகபட்சமாக மதுசங்கா 5 விக்கெட்களும் பேட்டிங்கில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 14 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

எங்களோட அதிர்ஷ்டம்:
அந்தளவுக்கு அனலாக பந்து வீசி இந்தியாவுக்கு எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்த பவுலர்களில் அதிகபட்சமாக முகமது ஷமி, 5 முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். பொதுவாகவே இந்திய கிரிக்கெட்டில் சச்சின் முதல் விராட் கோலி, ரோஹித் வரை பேட்ஸ்மேன்களே அதிக ஆதிக்கம் செலுத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுப்பது வழக்கமாகும்.

ஆனால் 2023 ஆசிய கோப்பை ஃபைனல் உட்பட சமீப காலங்களாகவே சிராஜ், ஷமி, பும்ரா ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அபார திறமையால் எதிரணிகளை தெறிக்க விட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகின்றனர். அதனால் தற்போதைய இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணி உலகத்தரம் வாய்ந்ததாகவும் இறக்கமற்றதாகவும் உருவெடுத்துள்ளதாக வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்ற பாகிஸ்தான் ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய மிரட்டலான பவுலர்களை எதிர்கொள்ளாதது தங்களுடைய அதிர்ஷ்டம் என்று தெரிவிக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் அவர்களை வலைப்பயிற்சியில் கொள்வது பேட்டிங்கில் முன்னேறுவதற்கு உதவுவதாகவும் கூறியுள்ளார். இதை பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இப்போட்டி மற்றும் முந்தைய போட்டியில் இந்திய பவுலர்கள் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பார்த்தால் கண்டிப்பாக அவர்களுக்கு எதிராக நாங்கள் விளையாடதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்”

இதையும் படிங்க: விசாரணை தேவை.. ஐசிசியே இந்தியாவுக்கு சப்போர்ட் பண்றாங்க.. முன்னாள் பாக் வீரர் கருத்துக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

“அதே சமயம் நாங்கள் அவர்களுக்கு எதிராக வலைப்பயிற்சியில் விளையாடுகிறோம். அது களத்தில் எவ்விதமான எதிரணி பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொள்ள முடியும் என்ற உத்வேகத்தை எங்களுக்கு கொடுக்கிறது. தற்போதைய இந்திய பவுலிங் அட்டாக் மிகவும் கடினமாக இருக்கிறது. அதை நான் ஆசிய கோப்பை ஃபைனலில் வெளியே உட்கார்ந்து பார்த்தேன். ஆனால் இன்று அதை நேரடியாக களத்தில் பார்த்தது நம்ப முடியாததாக இருந்தது. எங்களுடைய பவுலர்கள் முக்கிய நேரத்தில் உயர்ந்து நிற்கிறார்கள்” என்று கூறினார்.

Advertisement