விசாரணை தேவை.. ஐசிசியே இந்தியாவுக்கு சப்போர்ட் பண்றாங்க.. முன்னாள் பாக் வீரர் கருத்துக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

Hasan Raza
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக ஐசிசி நடத்தி வரும் 2023 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக ஆரம்பத்திலேயே வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா உலகக்கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக பரம எதிரி பாகிஸ்தானையும் பந்தாடி வீழ்த்தியது.

அதற்கிடையே ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளை தோற்கடித்த இந்தியா 20 வருடங்கள் கழித்து நியூசிலாந்தையும் ஐசிசி தொடரில் முதல் முறையாக வீழ்த்தியது. அதே வேகத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா நேற்று மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை வெறும் 55 ரன்களுக்கு சுருட்டி 302 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

- Advertisement -

ஐசிசி சப்போர்ட்:
மேலும் இத்தொடரில் முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்த முகமது ஷமி காயமடைந்த பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளில் மட்டும் 14 விக்கெட்டுகளை கொத்தாக எடுத்துள்ளார். அவரைப் பார்த்து பும்ரா, சிராஜூம் உத்வேகமடைந்து நல்ல லைன், லென்த்தை பின்பற்றி புதிய பந்தை எதிரணி பேட்ஸ்மேன்கள் தொட முடியாத அளவுக்கு ஸ்விங் செய்து மிரட்டி வருகிறார்கள்.

அதனால் தற்போது இந்தியாவின் பவுலிங் அட்டாக் இறக்கமற்றதாகவும் உலகத்தரம் வாய்ந்ததாகவும் முன்னேறியுள்ளதாக வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர்களே வெளிப்படையாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்தியா வேண்டுமென்றே வெல்வதற்காக ஐசிசியே வித்தியாசமான புதிய பந்துகளை இந்திய பவுலர்களிடம் கொடுப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஹசன் ராசா வினோதமாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

அதாவது மற்ற அணிகளை காட்டிலும் அதிகமாக ஸ்விங் கிடைப்பதற்காக இந்திய பவுலர்களுக்கு பிரத்தியேகமான புதிய பந்துகள் கொடுக்கப்படுவதாக விமர்சிக்கும் அவர் இது பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “ஐசிசி அல்லது பிசிசிஐ புதிய அல்லது வித்தியாசமான பந்துகளை இந்திய பவுலர்களுக்கு கொடுப்பதாக தெரிகிறது. எனவே இதில் விசாரணை தேவை. குறிப்பாக அந்த பந்து சோதிக்கப்பட வேண்டும். ஏனெனில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பந்தை அதிகமான உயரத்தில் பிடிக்கிறார்”

இதையும் படிங்க: முகமது ஷமி 5 விக்கெட் எடுத்ததும் தலைமேல் கைவைத்து கொண்டாட காரணம் இதுதான் – சுப்மன் கில் பேட்டி

“ஷமி 18 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதைப் பார்த்தால் சர்வதேச பேட்ஸ்மேன்கள் விளையாடுவது போல் தெரியவில்லை. ஏனெனில் பந்து பிட்ச்சான பின் எங்கேயோ செல்கிறது” என்று கூறினார். அதை பார்த்து முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா “இது கிரிக்கெட்டைப் பற்றி விவாதிக்கும் நிகழ்ச்சியா? இல்லையென்றால் ஆங்கிலத்தில் எங்காவது நையாண்டி செய்யும் நிகழ்ச்சி என்று குறிப்பிடுங்கள். ஏனெனில் உருது மொழியில் எழுதப்பட்டிருக்கும் இது எனக்கு புரியவில்லை” என்று முட்டாள்தனமாக பேசிய அவருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement