10 ஓவர்கள்..14 ரன்கள்..6 விக்கெட்.. வெஸ்ட் இண்டீஸ், தெ.ஆ அணிக்கு பிறகு – மோசமான சாதனையை படைத்த இலங்கை

SL
Advertisement

இந்திய அணிக்கு எதிராக நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியில் விளையாடிய குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது 302 வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்தது. அதோடு இந்த தோல்வியோடு சேர்த்து இலங்கை அணி இந்த தொடரில் ஏழு போட்டியில் ஐந்தாவது தோல்வியை பதிவு செய்தது.

இதன் காரணமாக இலங்கை அணியானது கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பினை தவறவிட்டது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இலங்கை அணி படைத்த இன்னொரு மோசமான சாதனை குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் உலக கோப்பை தொடரில் முதல் 10 ஓவர்களில் மிகக் குறைவாக ரன் அடித்த இரண்டாவது அணியாக இலங்கை அணி மோசமான சாதனையில் இணைந்துள்ளது. இதற்கு முன்னதாக 2003-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய போது முதல் 10 ஓவர்களில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அதேபோன்று கடந்து 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 10 ஓவர்களின் முடிவில் 12 ரன்கள் மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இலங்கை அணியானது முதல் 10 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே குவித்து 6 விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய சரிவை சந்தித்து இந்த மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.

இதையும் படிங்க : எனக்கா தெரியாது.. நீங்க தான் அப்படி சாயம் பூசிட்டிங்க.. செய்தியாளரிடம் கோபப்பட்ட ஸ்ரேயாஸ்.. நடந்தது என்ன

இந்த உலககோப்பை தொடருக்கு முன்னதாக சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று பலராலும் பேசப்பட்ட இலங்கை அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருவது அந்த அணியின் பலவீனத்தை வெளிப்படையாக காட்டுகிறது. இந்த சரிவிலிருந்து இலங்கை அணி மீண்டு வந்து பழையபடி சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement