எனக்கா தெரியாது.. நீங்க தான் அப்படி சாயம் பூசிட்டிங்க.. செய்தியாளரிடம் கோபப்பட்ட ஸ்ரேயாஸ்.. நடந்தது என்ன

Shreyas Iyer 2
- Advertisement -

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா முதல் அணியாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 88, ஸ்ரேயாஸ் ஐயர் 82, கில் 92 ரன்கள் எடுத்த உதவியுடன் 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதை துரத்தியை இலங்கையை தெறிக்க விட்டு 19.4 ஓவரில் 55 ரன்களுக்கு சுருட்டி மெகா வெற்றி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனால் உலகக்கோப்பை இந்தியா தங்களுடைய அதிக ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்த நிலையில் படுதோல்வியை சந்தித்த இலங்கை லீக் சுற்றுடன் வெளியேறியது.

- Advertisement -

கோபமான ஸ்ரேயாஸ்:
முன்னதாக இந்த போட்டியில் கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் அவுட்டானதும் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 106 மீட்டர் சிக்சர் உட்பட மொத்தம் 3 பவுண்டரி 6 சிக்ஸருடன் 82 (56) ரன்கள் குவித்து இந்தியா 357 ரன்கள் குவிப்பதற்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறும் பலவீனத்தைக் கொண்டுதால் நீக்குமாறு நிறைய கோரிக்கைகள் எழுந்த நிலையில் இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இப்போட்டியில் அசத்தினாலும் ரபாடா, யான்சென் போன்ற தரமான ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசக்கூடிய பவுலர்களை கொண்ட தென்னாப்பிரிக்காவை சமாளிக்க அடுத்த போட்டியில் என்ன திட்டத்தை வைத்திருக்கிறீர்கள்? என்று போட்டியின் முடிவில் ஸ்ரேயாஸ் ஐயரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எனக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளில் விளையாடத் தெரியாது என்று நீங்கள் தான் சாயம் பூசியுள்ளதாக செய்தியாளர்கள் மற்றும் விமர்சனங்களுக்கு கோபத்துடன் ஸ்ரேயாஸ் ஐயர் பதிலடி கொடுத்தது பின்வருமாறு.

- Advertisement -

“ஷார்ட் பந்துகள் என்னை திணறடிக்கிறதா? நீங்கள் நான் எவ்வளவு ஃபுல் ஷாட்களை அடித்துள்ளேன் என்பதை பார்த்திருக்கிறீர்களா. குறிப்பாக அதில் எத்தனை பந்துகள் பவுண்டரிக்கு சென்றது என்பதை பார்த்தீர்களா? பொதுவாக ஷார்ட் பிட்ச் அல்லது ஓவர் பிட்ச் பந்துகளாக இருந்தாலும் நீங்கள் சரியாக அடிக்கவில்லை என்றால் அவுட்டாவீர்கள்”

இதையும் படிங்க: முகமது ஷமி 5 விக்கெட் எடுத்ததும் தலைமேல் கைவைத்து கொண்டாட காரணம் இதுதான் – சுப்மன் கில் பேட்டி

“ஆனால் அதில் நான் 2 – 3 முறை அவுட்டானால் உடனடியாக இவருக்கு இன்ஸ்விங் பந்துகளை அடிக்க தெரியாது, பந்து வேகமாக வந்தால் கட் ஷாட் அடிக்கத் திணறுவார் என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள். பொதுவாகவே அனைத்து வீரர்களும் எந்த வகையான பந்திலும் அவுட்டாவார்கள். ஆனால் நீங்கள் தான் அவரால் ஷார்ட் பிட்ச் பந்துகளை அடிக்க முடியாது என்ற சூழ்நிலையை உருவாக்கி விடுகிறீர்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை நவம்பர் 5ஆம் தேதி கொல்கத்தாவில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement