முகமது ஷமி 5 விக்கெட் எடுத்ததும் தலைமேல் கைவைத்து கொண்டாட காரணம் இதுதான் – சுப்மன் கில் பேட்டி

Gill
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்று முடிந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெகு எளிதாக 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்துள்ளது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களை குவித்தது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், விராட் கோலி 82 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணியானது 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 55 ரன்கள் மட்டுமே குவித்தது.

இந்திய அணி சார்பாக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 5 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்த தொடரில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்று விளையாடியுள்ள அவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது 5 விக்கெடுகளை வீழ்த்திய முகமது ஷமி பெவிலியனை நோக்கி தலைமீது கை வைத்தவாறு விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இப்படி முகமது ஷமி வித்தியாசமாக விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட என்ன காரணம் என்பது குறித்து போட்டி முடிந்து இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : 52 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படி நடந்தது இதுவே முதல் முறையாம்.. அசத்தியமான சாதனை படைத்த இந்திய பவுலர்கள்

முகமது ஷமி தலைமீது கை வைத்து முடியை தடவி இவ்வாறு இந்த விக்கெட் கொண்டாட்டத்தில் ஈடுபட காரணம் யாதெனில் : எங்களது அணியில் உள்ள பந்துவீச்சு பயிற்சியாளருக்கு தலையில் முடி கிடையாது எனவே அவரை கிண்டல் செய்யும் விதமாகவே அவ்வாறு விக்கெட் கொண்டாட்டத்தில் ஷமி ஈடுபட்டார் இது ஜாலியான ஒரு கொண்டாட்டம் தான். மேலும் டெங்கு காய்ச்சலால் நான் ஆறு கிலோ வரை உடல் எடையை இழந்தேன். தற்போது இரண்டு கிலோ அதிகரித்துள்ளது இந்த தொடரில் ஒரு பெரிய ஸ்கோருக்காக நான் காத்திருக்கிறேன் என சுப்மன் கில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement