52 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படி நடந்தது இதுவே முதல் முறையாம்.. அசத்தியமான சாதனை படைத்த இந்திய பவுலர்கள்

IND vs SL Indian Bowlers
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 7 போட்டிகளிலும் 7 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து செமி ஃபைனல் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக இலங்கைக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போட்டியில் 302 ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பையில் தங்களுடைய அதிக ரன்கள் வித்தியாசத்திலான பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 88, ஸ்ரேயாஸ் ஐயர் 82, கில் 92 ரன்கள் எடுத்த உதவியுடன் 358 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதை துரத்திய இலங்கை முதல் பந்திலிருந்தே நெருப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 19.4 ஓவரில் 55 ரன்களுக்கு படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அதிரடி சாதனை:
அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் அனைவரும் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 14 ரன்கள் எடுத்தார். சொல்லப்போனால் 2023 ஆசிய கோப்பை ஃபைனலில் 50 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்த இலங்கை இப்போட்டியிலும் 55 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இந்தியாவிடம் தோற்று இந்த உலகக் கோப்பையிலிருந்து பரிதாபமாக வெளியேறியது.

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி, 5 முகமது சிராஜ் 4, பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் சாய்த்தனர். முன்னதாக இந்த போட்டியில் 358 ரன்கள் துரத்திய இலங்கைக்கு முதல் ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா முதல் பந்திலேயே துவக்க வீரர் நிசங்காவை எல்பிடபிள்யூ முறையில் கோல்டன் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அந்த நிலைமையில் 2வது ஓவரை வீசிய முகமது சிராஜ் தன்னுடைய முதல் ஓவரின் முதல் பந்திலேயே மற்றொரு துவக்க வீரர் திமுத் கருணரத்னேவை எல்பிடபிள்யயூ முறையில் கோல்டன் டக் அவுட்டாக்கினார். இப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் எதிரணியின் 2 துவக்க வீரர்களையும் மற்றொரு அணியின் 2 துவக்க பவுலர்கள் தங்களுடைய முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாக்கியது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க:

கடந்த 1971 முதல் நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிகளில் இதற்கு முன் எப்போதுமே ஒரு அணியின் 2 துவக்க பவுலர்கள் தங்களுடைய முதல் பந்தில் எதிரணியின் 2 துவக்க வீரர்களை கோல்டன் டக் அவுட்டாக்கியதில்லை. அப்படிப்பட்ட இந்த அரிதான சாதனையை முதல் அணியாக இந்தியா படைப்பதற்கு பும்ரா மற்றும் சிராஜ் முக்கிய பங்காற்றினார்கள் என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் வலுவான தென்னாப்பிரிக்காவை கொல்கத்தாவில் நவம்பர் 5ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement