என்னால் நடக்க முடியாத வரை.. அந்த இந்திய தொடரில் விளையாடுவேன்.. கிளன் மேக்ஸ்வெல் ஓப்பன்டாக்

Glenn Maxwell 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்தியாவை இறுதிப் போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை வென்றது. குறிப்பாக ரோகித் சர்மா தலைமையில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வெற்றி நடை போட்ட இந்தியாவை இறுதிப் போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா உலகின் புதிய சாம்பியனாக சாதனை படைத்து அனைவருக்கும் பாராட்டுகளை பெற்றது.

முன்னதாக அத்தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 91/6 என சரிந்த ஆஸ்திரேலியாவை கேப்டன் கமின்ஸ் உதவியுடன் அதிரடியாக விளையாடி தூக்கி நிறுத்திய கிளன் மேக்ஸ்வெல் இரட்டை சதமடித்து அபாரமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்து நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றினார். குறிப்பாக காலில் காயத்தை சந்தித்து நடக்க முடியாமல் தடுமாறிய அவர் அதையும் தாண்டி தன்னுடைய கைகளின் உதவியுடன் சிக்ஸர்களை அடித்து வெற்றி பெற வைத்தது சச்சின் உட்பட அனைத்து ஜாம்பவான்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

கடைசி வரை:
அதே போல நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3வது போட்டியில் தனி ஒருவனாக இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கிய அவர் ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் இந்திய மண்ணில் அதிரடியாக விளையாடிய அவர் அடுத்ததாக 2024 ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார்.

இந்நிலையில் தம்மால் நடக்க முடியாமல் செல்லும் வரை ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று கிளன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். மேலும் தம்முடைய கேரியரின் கடைசி போட்டி ஐபிஎல் தொடரில் தான் நடைபெறும் என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நான் விளையாடப் போகும் கடைசி தொடராக ஐபிஎல் இருக்கலாம்”

- Advertisement -

“என்னால் நடக்க முடியாத வரை ஐபிஎல் தொடரில் நான் விளையாடுவேன். ஏனெனில் என்னுடைய கேரியர் முழுவதும் ஐபிஎல் நிறைய நல்ல மாற்றங்களை கொடுத்ததை நினைத்துப் பார்க்கிறேன். அதில் நான் சந்தித்த நபர்களும், பயிற்சியாளர்களும், சர்வதேச வீரர்களும் என்னுடைய கேரியரில் சிறந்து விளங்குவதற்கு எப்படி உதவினார்கள் என்பதை திரும்பிப் பார்க்கிறேன்”

இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய 400 ரன் சாதனையை அந்த இந்திய வீரர் தான் முறியடிப்பார் – பிரைன் லாரா கருத்து

“குறிப்பாக 2 மாதங்கள் நீங்கள் விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற மகத்தான வீரர்களின் தோள் மீது கை போட்டு விளையாடும் வாய்ப்பையும் அவர்களுடன் சேர்ந்து மற்ற போட்டிகளைப் பற்றி விவாதிக்கும் வாய்ப்பையும் பெறுகிறீர்கள். எந்த வீரர்களிடம் நீங்கள் கேட்டாலும் இது நல்ல அனுபவமாக இருக்கும் என்று சொல்வார்கள். எனவே வரும் காலங்களில் இன்னும் நிறைய ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி ஏறத்தாழ வெஸ்ட் இண்டீஸ் போல இங்குள்ள சுழலுக்கு சாதகமான காய்ந்த சூழ்நிலைகளில் எப்படி அசத்தலாம் என்பதை கற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement