டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய 400 ரன் சாதனையை அந்த இந்திய வீரர் தான் முறியடிப்பார் – பிரைன் லாரா கருத்து

Lara
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாரா கடந்த 1990-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2007 வரை 299 ஒருநாள் போட்டிகள் மற்றும் 131 டெஸ்ட் போட்டிகளில் அந்த அணிக்காக விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான் வீரராக பார்க்கப்படும் சச்சினுக்கு இணையான புகழை இவரும் பெற்றுள்ளார் என்றால் அது மிகையல்ல.

குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ள லாரா 131 போட்டிகளில் 52 ரன்கள் சராசரியுடன் 11953 ரன்களை குவித்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்களை விளாசியுள்ள அவர் தனிநபர் அதிகபட்ச ரன்களாக (400) ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த வீரராக இன்றளவும் முன்னிலையில் உள்ளார்.

- Advertisement -

அவரது இந்த சாதனை தற்போது வரை முறியடிக்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் எதிர்காலத்தில் தன்னுடைய இந்த 400 ரன்கள் சாதனையை யாரால் முறியடிக்க முடியும் என்பது குறித்து பேசிய லாரா :

இந்திய அணியின் துவக்க வீரரான சுப்மன் கில்லால் நிச்சயம் என்னுடைய சாதனைகளை முறியடிக்க முடியும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சுப்மன் கில்லால் என்னுடைய இரண்டு சாதனைகளை முறியடிக்க முடியும். தற்போதுள்ள வீரர்களில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

- Advertisement -

உலக கோப்பையில் அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றாலும் இதுவரை அவர் விளையாடி இருக்கும் விதத்தை பார்க்கையில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்துள்ள அவர் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமும் அடித்துள்ளார். அதேபோன்று ஐபிஎல்லிலும் சதம் அடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலக இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் – விவரம் இதோ

இப்படி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் இனிவரும் ஐ.சி.சி தொடர்களிலும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்துவார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய 400 ரன்கள் சாதனையை அவரால் நிச்சயம் கடக்க முடியும். அதுமட்டும் இன்றி ஒருவேளை அவர் கவுண்டிக்கு சென்று விளையாடினால் அங்கு என்னுடைய 501 ரன்கள் சாதனையையும் அவரால் முறியடிக்க முடியும் என லாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement