தென்னாப்பிரிக்க தொடரில் இருந்து விலக இருக்கும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்துள்ளது.

அதற்கு அடுத்து தற்போது தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியானது அங்கு மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான மூன்று விதமான இந்திய அணிகளும் தனித்தனி கேப்டன்களுக்கு கீழ் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் பல்வேறு வீரர்களுக்கு வெவ்வேறு விதமான வடிவத்தில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறாமல் தவித்து வந்த தீபக் சாகர் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரில் தான் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இடம்பிடித்திருந்தார்.

- Advertisement -

அந்தவகையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் விளையாடியிருந்த அவர் அதன்பிறகு ஐந்தாவது டி20 போட்டிக்கு முன்னதாக அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை கேட்டதும் இந்திய அணியில் இருந்து விலகிய அவர் தற்போது அவரது தந்தையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு தென்னாப்பிரிக்க தொடரில் இருந்தும் விலக உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : அவ்ளோ தான் அவரோட கேரியரும் முடிஞ்ச்சு.. இனிமேல் பாக்க முடியாது.. ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தையின் அருகே இருந்து மருத்துவ உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement