அவ்ளோ தான் அவரோட கேரியரும் முடிஞ்ச்சு.. இனிமேல் பாக்க முடியாது.. ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

Aakash Chopra 3
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் அதே ஆஸ்திரேலியாவுக்கு அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் வென்றது. இதை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட அடுத்தடுத்த தொடர்களில் விளையாடுவதற்கு தயாராகியுள்ளது.

அந்த சுற்றுப்பயணத்தில் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள டி20 மற்றும் ஒருநாள் அணியில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். அதைத்தொடர்ந்து நடைபெறும் டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் புஜாரா மற்றும் ரகானே ஆகிய சீனியர் வீரர்கள் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கழற்றி விடப்பட்டார்கள்.

- Advertisement -

முடிந்த கேரியர்:
அவர்களை போலவே அந்த 3 விதமான அணிகளில் எதிலுமே நட்சத்திர சீனியர் வீரர் புவனேஸ்வர் குமார் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. 2012இல் அறிமுகமாகி புதிய பந்தை ஸ்விங் செய்து துல்லியமாக பந்து வீசுவதில் பெயர் பெற்ற புவனேஸ்வர் குமார் குறுகிய காலத்திலேயே 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

இருப்பினும் 2019 உலகக் கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் தடுமாறிய அவர் 2021, 2022 டி20 உலகக் கோப்பைகளில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் கடந்த வருடம் கழற்றி விடப்பட்டார். ஆனால் 2023 சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் 16 விக்கெட்டுகளை 5.84 என்ற சிறப்பான எக்னாமியில் எடுத்ததால் குறைந்தபட்சம் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புவனேஸ்வர் குமார் மீண்டும் கழற்றி விடப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதனால் அவரின் கேரியர் முடிந்ததாக ஆதங்கத்துடன் தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நானும் நீங்களும் அவரின் கேரியரை முடிவு செய்ய முடியாது. ஏனெனில் நாம் தேர்வு குழுவினர் கிடையாது. இருப்பினும் தற்போதைய நிலைமையில் அவருக்கு கம்பேக் கொடுப்பதற்கான பாதை முடிந்ததாகவே தெரிகிறது. அவருக்கான வாய்ப்புகளும் தற்போது கிடைப்பதாக தெரியவில்லை”

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரின் ஒரு சிறந்த டி20 பேட்ஸ்மேன் இவர்தான் – ஆஷிஷ் நெஹ்ரா கணிப்பு

“குறிப்பாக கடந்த சயீத் முஷ்டாக் மற்றும் ஐபிஎல் தொடரில் ஓரளவு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் நீங்கள் எவ்விதமான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படவில்லை. சொல்லப்போனால் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் முன்பாகவே அவரை தேர்வு செய்யப் போவதில்லை என்ற முடிவை அவர்கள் எடுத்தனர். தற்போது டி20 கிரிக்கெட்டிலும் அவரை தேர்வு குழுவினர் தேர்வு செய்யவில்லை” என்று கூறினார்.

Advertisement