ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 தொடரின் ஒரு சிறந்த டி20 பேட்ஸ்மேன் இவர்தான் – ஆஷிஷ் நெஹ்ரா கணிப்பு

Nehra
- Advertisement -

இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடியது. அந்த வகையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கை இந்த டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்த டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டு சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அதற்கு காரணம் யாதெனில் 2024-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்காக தற்போது இந்திய அணியை தயார் படுத்தும் விதமாக பிசிசிஐ இந்த புதிய யுக்தியை கையில் எடுத்தது.

- Advertisement -

அந்த வகையில் அவர்கள் கையில் எடுத்த இந்த யுக்தி தற்போது சரியான பலனை கொடுத்துள்ளது. ஏனெனில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.

எதிர்வரும் டி20 உலக கோப்பைக்கு இது ஒரு நல்ல உதாரணமாக இருக்கும் என்றே பலரும் கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்த நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் எந்த வீரர் சிறப்பாக செயல்பட்டார் என்பது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில் :

- Advertisement -

இந்த தொடரில் எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்? என்பதை என்னால் சரியாக கனித்து சொல்ல முடியாது. ஆனாலும் ரிங்கு சிங் மிகச்சிறப்பாக விளையாடினார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் முன்னணி வீரர்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அணியின் எண்ணிக்கையை உயர்த்தியது அதோடு மட்டுமின்றி வெற்றிக்கும் உதவியது.

இதையும் படிங்க : மற்ற முன்னாள் வீரர்கள் மாதிரி.. என்னால் அது மட்டும் செய்ய முடியாது.. தல தோனி ஓப்பன்டாக்

அந்த வகையில் இறுதி நேரத்தில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இனிவரும் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியில் பினிஷராக இருப்பார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என ஆஷிஷ் நெஹ்ரா கூறினார்.

Advertisement