மற்ற முன்னாள் வீரர்கள் மாதிரி.. என்னால் அது மட்டும் செய்ய முடியாது.. தல தோனி ஓப்பன்டாக்

MS Dhoni
- Advertisement -

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டனாகவும் விளையாடி ஓய்வு பெற்றார். கடந்த 2004இல் அறிமுகமான அவர் அதிரடியாக விளையாடி இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடிப்பவர்களாக மட்டுமல்லாமல் பெரிய ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற தற்போதைய நிலைமை உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்றே சொல்லலாம்.

அதே போல மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்திய அவர் லோயர் மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ஃபினிஷராகவும் செயல்பட்டார். அதை விட 3 விதமான வெள்ளைப் பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

- Advertisement -

முடியாத காரியம்:
முன்னதாக சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற நிறைய முன்னாள் வீரர்கள் நவீன யுகத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் யூடியூப் இணையத்தில் சேனலை துவங்கி தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் வைத்து வருகிறார்கள். சொல்லப்போனால் ஆகாஷ் சோப்ரா போன்றவர் அதையே தம்முடைய வருமானத்திற்கான வேலையாக வைத்திருக்கும் நிலையில் அஸ்வின் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே தம்முடைய ஆக்கபூர்வமான வெளியிட்டு வருகிறார்.

அது போன்ற சூழ்நிலையில் நீங்கள் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து உங்களுடைய கருத்துக்களை தினந்தோறும் பதிவிட்டு வந்தால் என்ன? என்று சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் எம்எஸ் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தோனி பதிலளித்தது பின்வருமாறு. “இது பற்றி சிலர் ஏற்கனவே என்னிடம் கேட்டனர். என்னால் அது முடியாது. ஏனெனில் அது மிகவும் கடினமானது”

- Advertisement -

“கேமரா முன்பாக நிதானமாக அமர்ந்து பேசுவது கடினம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் என்னால் அதை செய்ய முடியாது. அது இயற்கையாகவே இயல்பாக எனக்கு வரவில்லை. மாறாக நேருக்கு நேராக பேசுவதை நான் விரும்புகிறேன். நான் அது போன்ற நபர் தான். எனவே நான் யூடியூப் சேனலை நடத்துவேன் என்று எப்போதும் நினைப்பதில்லை. மேலும் நான் சற்று அதிகமாக பேச மாட்டேன்”

இதையும் படிங்க: 59/4 என சரிந்த கேரளா.. 128 ரன்கள்.. கேப்டனாக போராடிய சஞ்சு சாம்சன்.. தேர்வுக் குழுவுக்கு பதிலடி

“அப்படி செய்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 – 3 வீடியோக்களை போட்டு விட்டு ஒரு வருடம் காணாமல் சென்று விடுவேன்” என்று கூறினார். அவர் கூறுவது போல ஜாம்பவான் சச்சின் கூட அடிக்கடி ட்விட்டர் பக்கத்தில் அனைத்து விதமான போட்டிகள் பற்றிய கருத்துக்களையும் வீரர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார். ஆனால் தோனி மட்டும் இந்தியா வென்றாலும் யாருடைய பிறந்தநாள் வந்தாலும் எதற்குமே ரியாக்சன் கொடுக்காமல் விவசாயம் பார்க்கிறாரே தவிர வருடக்கணக்கில் சமூக வலைதளத்தில் அமைதியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement