59/4 என சரிந்த கேரளா.. 128 ரன்கள்.. கேப்டனாக போராடிய சஞ்சு சாம்சன்.. தேர்வுக் குழுவுக்கு பதிலடி

Sanju Samson 128
- Advertisement -

இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 2023 சீசனில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற 114வது லீக் போட்டியில் ரயில்வேஸ் மற்றும் கேரளா அணிகள் மோதின. கர்நாடகாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேரளா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ரயில்வேஸ் 50 ஓவர்களில் 255/5 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக சகாப் யுவராஜ் சிங் சதமடித்து 121, பிரத்தம் சிங் 61 ரன்கள் எடுக்க கேரளா சார்பில் அதிகபட்சமாக வைசாக் சந்திரன் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 256 ரன்களை துரத்திய கேரளாவுக்கு ரோகன் குன்னும்மாள் 0, சச்சின் பேபி 9, சல்மான் நிசார் 2 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அசத்திய சாம்சன்:
போதாகுறைக்கு மறுபுறம் நிதானமாக விளையாட முயற்சித்த மற்றொரு துவக்க வீரர் கிருஷ்ணா பிரசாத்தும் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 59/4 என ஆரம்பத்திலேயே சரிந்த கேரளா தோல்வியின் பிடியில் சிக்கிய போது மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் சரிவை சரி செய்வதற்காக போராடினார்.

அவருக்கு எதிர்ப்புறம் கைகொடுக்க முயற்சித்த ஷ்ரேயாஸ் கோபால் 5வது விக்கெட்டுக்கு 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடி 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் நேரம் செல்ல செல்ல சற்று அதிரடியாக செயல்பட்டு 8 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 128 (139) ரன்கள் விளாசி கடைசி ஓவரில் அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் 50 ஓவர்களில் 237/8 ரன்கள் மட்டுமே எடுத்த கேரளா வெறும் 18 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை சந்தித்தது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய ரயில்வேஸ் சார்பில் அதிகபட்சமாக ராகுல் ஷர்மா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆனாலும் இந்த போட்டியில் முக்கிய நேரத்தில் கேப்டனாக முன்னின்று தம்முடைய மாநில அணிக்காக சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடியது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

இதையும் படிங்க: ஆமாமா அவர் அரிதான டேலண்ட் கொண்ட பிளேயர் தான்.. நட்சத்திர வீரரை கலாய்த்த அஜய் ஜடேஜா

கடந்த வருடம் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் அவரை கழற்றி விட்ட தேர்வுக்குழு சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு கொடுத்தது. அதில் 2023 உலகக்கோப்பை உட்பட சுமாராக செயல்பட்டதால் அடுத்ததாக நடைபெறும் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் சூரியகுமார் கழற்றி விடப்பட்டு சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெற்றுள்ளார். அந்த நிலைமையில் இனியாவது எனக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுங்கள் என்று தேர்வுக்குழுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இப்போட்டியில் சஞ்சு சாம்சன் அசத்தினார் என்றால் மிகையாகாது.

Advertisement