ஆமாமா அவர் அரிதான டேலண்ட் கொண்ட பிளேயர் தான்.. நட்சத்திர வீரரை கலாய்த்த அஜய் ஜடேஜா

Ajay Jadeja 4
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் லீக் மற்றும் செமி ஃபைனலில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்தியா தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றது. அதனால் 2011 போல இம்முறை கண்டிப்பாக சொந்த மண்ணில் கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபைனலில் 240 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

முன்னதாக இத்தொடரில் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா முக்கிய நேரத்தில் காயமடைந்து வெளியேறியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக இறுதிப் போட்டியில் பாண்டியா இல்லாததால் பேட்டிங் வரிசையில் ஆழம் குறைந்தது. அதன் காரணமாக விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

அரிதான திறமை:
அந்தளவுக்கு பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் சமநிலையை ஏற்படுத்தக்கூடிய பாண்டியா மிகவும் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளிலும் அசத்தக்கூடிய அரிதான திறமையை கொண்டிருப்பதாலேயே அவரை களத்தில் அரிதாக பார்க்க முடிவதாக முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா வெளிப்படையாக கிண்டலடிக்கும் வகையில் விமர்சித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியாவை அரிதான திறமை கொண்டவர் என்று சொல்வதற்கான உண்மையான அர்த்தத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அவர் அரிதான திறமை கொண்டவர். அதனாலேயே அவரை களத்தில் அரிதாக பார்க்க முடிகிறது. அந்த வகையில் அவரை அரிதானவர் என்று சொல்வது சரியாகும்” என கூறினார்.

- Advertisement -

அவரைப் போலவே உலகக் கோப்பையிலிருந்து பாண்டியா காயமடைந்து வெளியேறுகிறார் என்பதை அறிந்த பெரும்பாலான ரசிகர்கள் இது இந்திய அணிக்கு பின்னடைவு அல்ல சாதகமான செய்தி என்று சமூக வலைதளங்களில் சொன்னார்கள். அதற்கேற்றார் போல் பாண்டியாவுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற ஷமி மிகச் சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்து வெற்றிகளில் பங்காற்றினார்.

இதையும் படிங்க: ஐபிஎல் 2024 சீசனில் இதை செஞ்சா உங்க கேரியரே மாறும்.. கேஎல் ராகுலுக்கு மஞ்ரேக்கர் அட்வைஸ்

இந்த நிலைமையில் காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வரும் பாண்டியா அடுத்ததாக 2024 ஐபிஎல் தொடரில் தான் நேரடியாக களமிறங்குவார் என்ற செய்திகள் காணப்படுகின்றன. இதற்கிடையே குஜராத் அணிக்காக கேப்டனாக செயல்பட்டதை மறந்து 2024 சீசனில் மும்பை அணிக்காக விளையாடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள அவர் விஸ்வாசத்தை மறந்து விட்டார் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement