ஐபிஎல் 2024 சீசனில் இதை செஞ்சா உங்க கேரியரே மாறும்.. கேஎல் ராகுலுக்கு மஞ்ரேக்கர் அட்வைஸ்

Sanjay manjrekar 5
- Advertisement -

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் துபாயில் நடைபெறுகிறது. அதற்கு முன்பாக குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் வாங்கியது பெரிய பரபரப்பு ஏற்படுத்தியது. அதே போல மும்பை அணிக்காக விளையாடிய கேமரூன் கிரீனை பெங்களூரு அணி நிர்வாகம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கி ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

அந்த வரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த இளம் துவக்க வீரர் தேவ்தூத் படிக்கல் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக டிரேடிங் முறையில் வாங்கப்பட்டுள்ளார். இதற்கு முன் பெங்களூரு அணியில் விளையாடிய அவர் ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் – ஜெய்ஸ்வால் இருந்ததால் 2023 சீசனில் துவக்க வீரராக விளையாடும் வாய்ப்பு பெறவில்லை.

- Advertisement -

மஞ்ரேக்கர் ஆலோசனை:
மேலும் மிடில் ஆர்டரில் கிடைத்த வாய்ப்புகளிலும் அவர் சிறப்பாக செயல்படாததால் தற்போது லக்னோ அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். இந்நிலையில் 2024 சீசனில் உங்களுடைய ஓப்பனிங் இடத்தை படிக்கலுக்கு கொடுத்து விட்டு நீங்கள் மிடில் ஆர்டரில் விளையாடினால் உங்களின் கேரியர் மாறும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த முடியும் என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுலுக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் வித்தியாசமான ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னிடம் வித்தியாசமான பரிந்துரை இருக்கிறது. ஏனெனில் லக்னோ அணியில் தற்போது குயிண்டன் டீ காக் உடன் துவக்க வீரராக களமிறங்குவதற்கு தகுதியாக படிக்கல் இருக்கிறார். மேலும் படிக்கல் இதற்கு முன் பெரும்பாலும் டாப் ஆர்டரில் மட்டுமே நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்”

- Advertisement -

“எனவே கேஎல் ராகுல் பேட்டிங் வரிசையில் கீழே இறங்க வேண்டும். அது அவருடைய டி20 கேரியர் மட்டுமல்லாமல் லக்னோ அணிக்கும் மிகப்பெரிய பயனை ஏற்படுத்தும்” என்று கூறினார். அவர் கூறுவது போல சமீபத்திய வருடங்களாகவே துவக்க வீரராக 2022 டி20 உலகக் கோப்பை முதல் 2023 ஐபிஎல் வரை கேஎல் ராகுல் சுமாராகவே விளையாடி தம்முடைய அணி தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய சென்னை மக்கள்.. கவலையுடன் உருக்கமான பதிவை வெளியிட்ட டேவிட் வார்னர்

அதனால் தடவல் நாயகன் என்று ரசிகர்களின் கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு உள்ளான அவர் 2023 உலகக் கோப்பையில் ரிசப் பண்ட் காயமடைந்ததால் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். எனவே துவக்க வீரராக களமிறங்குவதை விட மிடில் ஆர்டரில் ராகுல் விளையாடுவது நல்ல பயனை கொடுக்கும் என்றால் மிகையாகாது.

Advertisement