13 வருடத்துக்கு முன்.. ஜடேஜா சந்தித்த தடையை தற்போது பாண்டியா எதிர்கொள்வாரா? ரூல்ஸ் சொல்வது என்ன

Jadeja Pandya
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து கிரிக்கெட் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை டிரேடிங் முறையில் வாங்கி இறுதிக்கட்ட அணியை சமர்ப்பித்துள்ளன. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா திடீரென்று மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டது ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காரணம் 2015இல் மும்பை இந்தியன்ஸ் அணியில் தம்முடைய கேரியரை துவங்கிய பாண்டியா 2021 வரை 4 கோப்பைகளை வெல்வதில் ஆல்ரவுண்டராக முக்கிய பங்காற்றினார். ஆனால் அதன் பின் காயத்தை சந்தித்து தடுமாறிய அவரை மும்பை தக்க வைக்காத நிலையில் 15 கோடி கொடுத்து வாங்கிய குஜராத் தங்களுடைய கேப்டனாக நியமித்தது.

- Advertisement -

தடை வருமா:
அந்த வாய்ப்பில் ஆல் ரவுண்டராக அசத்திய பாண்டியா முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று 2வது சீசனில் ஃபைனல் வரை குஜராத்தை அழைத்து சென்றார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்ற அனுபமிக்க ரோஹித் சர்மா இருக்கும் போது ஏன் மும்பை இவ்வளவு அவசரமாக பாண்டியாவை வாங்கியது என்பதே ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

மேலும் பாண்டியாவை வாங்குவதற்காக 15 கோடிகளை குஜராத்துக்கு ரொக்கமாக கொடுத்துள்ள மும்பை பரிமாற்று கட்டணமாக அதில் 50% செலுத்த வேண்டும் என்ற செய்திகளும் வலம் வருகின்றன. இந்த சூழ்நிலையில் பாண்டியா விதிமுறையை மீறி மும்பைக்கு சென்றுள்ளாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடம் காணப்படுகிறது. அதாவது கடந்த 2008இல் ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்ட ரவீந்திர ஜடேஜா நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2010ஆம் ஆண்டு தம்முடைய சம்பளத்தை உயர்த்துமாறு அந்த அணி நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இருப்பினும் அதற்கு ராஜஸ்தான் நிர்வாகம் அறிவிப்பு தெரிவித்தது. அதனால் ஏமாற்றமடைந்த ஜடேஜா ராஜஸ்தான் அணியிலிருந்து கொண்டே மும்பை அணியிடம் மறைமுகமாக தம்மை அதிக தொகை கொடுத்து வாங்குமாறு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அது ஐபிஎல் அடிப்படை விதிமுறைக்கு எதிரானதாகும். அதை கண்டறிந்த ஐபிஎல் நிர்வாகம் விதிமுறை மீறிய ஜடேஜாவை 2010 தொடரில் விளையாடுவதற்கு தடை விதித்தது.

இதையும் படிங்க:13 வருடத்துக்கு முன்.. ஜடேஜா சந்தித்த தடையை தற்போது பாண்டியா எதிர்கொள்வாரா? ரூல்ஸ் சொல்வது என்ன

இருப்பினும் தற்போது மும்பை மற்றும் குஜராத் ஆகிய 2 அணி நிர்வாகங்கள் தான் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பாண்டியாவை வாங்கியுள்ளன. ஆனால் ஜடேஜா தன்னிச்சையாக ராஜஸ்தான் அணிக்கு தெரியாமல் மும்பையிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் விதிமுறையை மீறி தடை பெற்றார். ஆனால் தற்போது பாண்டியா அது போல் செய்யாமல் மும்பை மற்றும் குஜராத் அணி நிர்வாகம் தான் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வாங்கின. அதனால் பாண்டியாவுக்கு தடை கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement