ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் – லிஸ்ட் இதோ

IND-vs-AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முடிந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்தத் தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்கிற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நவம்பர் 28-ஆம் தேதி கௌகாத்தி நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

- Advertisement -

ஆனால் கடந்த இரண்டு போட்டிகளாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு வெற்றியை பெற்றுள்ளதால் நாளைய மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் முதல் இரண்டு போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தங்களது பலவீனத்தை எங்குமே வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக முதல் 2 போட்டிகளில் விளையாடிய அதே வீரர்கள் தான் மூன்றாவது போட்டியிலும் விளையாடுவார்கள் என்று தெரிகிறது.

- Advertisement -

ஒருவேளை மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் பட்சத்தில் எஞ்சியுள்ள இரண்டு போட்டியில் பெஞ்சில் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்திய அணி தொடரை கைப்பற்றிய பிறகு நிச்சயம் வீரர்களை மாற்றி பயன்படுத்த யோசிக்கலாம். அதன்படி நாளைய 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்தியா – ஆஸி மோதும் 3வது டி20 நடைபெறும் கௌகாத்தி மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

1) ருதுராஜ் கெய்க்வாட், 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) இஷான் கிஷன், 4) சூரியகுமார் யாதவ், 5) திலக் வர்மா, 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) ரவி பிஷ்னாய், 9) அர்ஷ்தீப் சிங், 10) முகேஷ் குமார், 11) பிரசித் கிருஷ்ணா.

Advertisement