இந்தியா – ஆஸி மோதும் 3வது டி20 நடைபெறும் கௌகாத்தி மைதானம் எப்படி? பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Barsapara Stadium
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் தோல்வி பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் சூரியகுமார் தலைமையில் விளையாடி வரும் இந்தியா 2வது போட்டியில் ஜெய்ஸ்வால், இஷான் கிசான், ருதுராஜ் அதிரடியால் எளிதாக வென்றது.

அதனால் 2 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா 3வது போட்டியிலும் வென்று முன்கூட்டியே கோப்பையை கைப்பற்றி தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க போராட உள்ளது. மறுபுறம் உலகக் கோப்பையை முத்தமிட்ட ஆஸ்திரேலியாவுக்கு இது பெரிய தோல்வி கிடையாது என்றாலும் தங்களுடைய தரத்தைக் காட்டி 3வது போட்டியில் வென்றால் மட்டுமே இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்று நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

கௌகாத்தி மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி நவம்பர் 28ஆம் தேதி அசாம் மாநிலம் கௌகாத்தி நகரில் இருக்கும் பர்ஸபரா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. கடந்த 2012இல் தோற்றுவிக்கப்பட்டு 40000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இம்மைதானத்தில் 2017 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 1 வெற்றி 1 தோல்வியை பதிவு செய்தது.

ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது. குறிப்பாக 2017இல் இங்கு ஆஸ்திரேலியாவை சந்தித்த போது தோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் 6 வருடங்கள் கழித்து விளையாட உள்ளது. இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் மற்றும் அதிக ரன்கள் (61) அடித்த இந்திய வீரராக சூரியகுமார் யாதவ் இருக்கிறார். அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக அரஷ்தீப் சிங் (2) உள்ளார். இந்த மைதானத்தில் அதிகபட்ச டி20 ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக : 237/3, 2022

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
நவம்பர் 28ஆம் தேதி கௌகாத்தி நகரில் மழை பெய்வதற்கு 10% வாய்ப்புள்ளதாகவும் வானம் லேசான மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெற்று என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
ஆரம்ப காலங்களில் மெதுவாக இருந்து வந்த கௌகாத்தி பிட்ச் சமீபத்திய வருடங்களில் பேட்டிக்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக கடைசியாக இங்கு நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் சேர்ந்து 400+ ரன்கள் அடித்து நொறுக்கின. எனவே இம்முறையும் இம்மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 2025 தொடரில் பாகிஸ்தானுக்கு இப்போதே ஆப்பு வைக்கும் இந்தியா.. வெளியான தகவல்

அதனால் பவுலர்கள் நல்ல லைன், லென்த் ஆகியவற்றைப் பின்பற்றி சிறப்பாக பந்து வீசினால் மட்டுமே அசத்த முடியும். இந்த மைதானத்தில் வரலாற்றில் முடிவு கிடைத்த 2 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி மற்றும் சேசிங் செய்த அணி தலா ஒருமுறை வென்றுள்ளது. எனவே இம்முறை இரவு நேரத்தில் நடைபெறும் இப்போட்டியில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் சேசிங் செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement