IND vs WI : பலவீனமான வெ.இ அணியிடம் சொதப்பல், 2016க்கு பின்பும் 17 வருடங்கள் கழித்தும் இந்திய அணி 2 தோல்வியை சந்தித்தது எப்படி?

team india
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து தலை குனிந்தது. இருப்பினும் அதற்கடுத்த 2 போட்டிகளில் போராடி வென்று தொடரை சமன் செய்த இந்தியா ஆகஸ்ட் 8ஆம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நடைபெற்ற வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் 5 (4) சுப்மன் கில் 9 (9) என தொடக்க வீரர்கள் அகில் ஹொசைன் சுழலில் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 17/2 என்ற தடுமாற்று துவக்கத்தை பெற்றது. அப்போது களமிறங்கிய சூரியகுமார் யாதவுடன் இந்த தொடர் முழுவதும் அசத்திய திலக் வர்மா மீண்டும் சிறப்பாக செயல்பட்டு 3 பவுண்டரி 2 சிக்சருடன் 3வது விக்கெட்டுக்கு 47 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் 27 (18) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த சஞ்சு சாம்சன் பொறுப்பின்றி 13 (10) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

அந்த நிலைமையில் வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தடுமாறி 14 ரன்களில் அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து போராடிய சூரியகுமார் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் அக்சர் படேல் 13 (10) ரன்கள் எடுத்த போதிலும் 20 ஓவர்களில் இந்தியா 165/9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து 166 ரன்கள் துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிரடி துவக்கிய கெய்ல் மேயர்ஸ் 10 (6) ரன்களில் அவுட்டாகி சென்றாலும் அடுத்ததாக வந்த நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் வழக்கம் போல சரமாரியாக அடித்து நொறுக்கினார்.

குறிப்பாக முதலிரண்டு போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது போலவே மீண்டும் மிரட்டலாக பேட்டிங் செய்த அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய பிரண்டன் கிங் விரைவாக ரன்களை சேர்த்து அரை சதமடித்து வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். அப்போது இடையே மழை வந்து மீண்டும் துவங்கிய போட்டியில் பூரானை 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 47 (35) ரன்களில் அவுட்டாக்கிய திலக் வர்மா வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

ஆனால் ப்ரெண்டன் கிங் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 85* (55) ரன்களும் ஷாய் ஹோப் 22* (13) ரன்களும் எடுத்ததால் 18 ஓவரிலேயே 171 ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று 3 – 2 (5) என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி டி20 கிரிக்கெட்டில் இன்னும் நாங்கள் சாய்ந்து விடவில்லை என்பதை நிரூபித்து சொந்த மண்ணில் கோப்பையை முத்தமிட்டது.

முன்னதாக இத்தொடரில் பவுலிங் சிறப்பாக இருந்தும் சூரியகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோரை தவிர்த்து எஞ்சிய பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டதே தோல்விக்கு காரணமானது. குறிப்பாக வெற்றியாளரை தீர்மானிக்கும் இந்த போட்டியில் அந்த இருவரை தவிர்த்து இதே மைதானத்தில் நடந்த 4வது போட்டியில் 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்த ஜெய்ஸ்வால் – கில் உட்பட எஞ்சிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -

அப்படி வெற்றிக்கு போராடுவதற்கு தேவையான ரன்களை பேட்ஸ்மேன்கள் எடுக்காததால் பவுலர்களும் கடைசி போட்டியில் சுமாராகவே செயல்பட்டது தோல்வியை உறுதியாக்கியது. இதன் காரணமாக தற்சமயத்தில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழும் இந்தியா 2016க்குப்பின் முதல் முறையாக தற்போது பலவீனமான தனியாக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டி20 தொடரில் தோல்வியை சந்தித்தது.

இதையும் படிங்க:IND vs WI : காலை வாரிய முக்கிய பேட்ஸ்மேன்கள், மீண்டும் தூக்கிய சூரியகுமார் – இந்திய அணியை பவுலர்கள் காப்பாற்றுவார்களா?

குறிப்பாக 2016இல் தோனி தலைமையில் 1 – 0 (2) என்ற கணக்கில் தோற்ற இந்தியா 9 வருடங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் தோற்றது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 2006க்குப்பின் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் எதிராக ஒரு 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவமான தோல்வியை சந்தித்துள்ளது.

Advertisement