IND vs WI : காலை வாரிய முக்கிய பேட்ஸ்மேன்கள், மீண்டும் நின்ற சூரியகுமார் – இந்திய அணியை பவுலர்கள் காப்பாற்றுவார்களா?

Suryakumar Yadav IND vs WI
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே பின்னடைவுக்குள்ளான இந்தியா அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று தக்க பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்து அசத்தியது. அதனால் 2 – 2* என்ற கணக்கில் சமனடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப்போட்டி ஆகஸ்ட் 13ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருக்கும் லடார்ஹில் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

அதில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததுடன் தங்களுடைய அணியில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கடந்த போட்டியில் 165 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் இம்முறை ஜெய்ஸ்வாலை முதல் ஓவரிலேயே 5 (4) ரன்களில் அவுட்டாக்கிய அகில் ஹொசைன் தன்னுடைய அடுத்த ஓவரில் மறுபுறம் தடுமாறிய சுப்மன் கில்லையும் 9 (9) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

அதனால் 17/2 என சுமாரான தொடக்கத்தைப் பெற்று திண்டாடிய இந்தியாவுக்கு அடுத்ததாக நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவுடன் இணைந்து அதிரடியாக விளையாடிய திலக் வர்மா விரைவாக ரன்களை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார். குறிப்பாக இத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்தி வரும் அவர் 3வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு சரிவை சரி செய்த போதிலும் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 27 (18) ரன்களில் அவுட்டானார்.

ஆனால் அப்போது வந்த சஞ்சு சாம்சன் பொறுப்புடன் செயல்படாமல் 2 சிக்சரை பறக்க விட்டாலும் 13 (9) ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதால் 87/4 என மீண்டும் இந்தியா சரிந்தது. அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு அரை சதமடித்து சூரியகுமாருடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் தடுமாற்றமாகவே செயல்பட்டு 14 (18) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அடுத்த ஓவரிலேயே இந்தியாவை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருந்த சூரியகுமார் யாதவ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 61 (45) ரன்கள் குவித்து அவுட்டாக அடுத்ததாக வந்த அரஷ்தீப் 8 (4) குல்தீப் 0 என டெயில் எண்டர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அக்சர் பட்டேல் 13 (10) ரன்கள் முகேஷ் குமார் 4* (1) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் இந்தியா 165/9 ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரோமாரியா செஃபார்ட் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முன்னதாக இப்போட்டி நடைபெறும் மைதானம் முதலில் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்பதாலேயே டாஸ் வென்ற பாண்டியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இருப்பினும் மீண்டும் சூரியகுமார் மற்றும் திலக் வர்மா ஆகியோரை தவிர்த்து யாருமே அதிரடியாக செயல்படாததால் இந்தியா சற்று குறைவான இலக்கையே நிர்ணயித்துள்ளது. குறிப்பாக நேற்று நடந்த கடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 179 ரன்களை இந்தியா எளிதாக சேசிங் செய்து வென்றது என்பது இந்திய ரசிகர்களுக்கு கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.

இதையும் படிங்க:IND vs WI : என்னன்னு எனக்கே புரியல ஆனா அங்க மட்டும் என்னோட பேட் சீறிப்பாயுது – ரசிகர்களின் கிண்டலை உண்மையாக்கும் கில் பேட்டி

ஆனாலும் வரலாற்றில் இங்கு நடைபெற்ற 15 சர்வதேச டி20 போட்டிகளில் 3 முறை மட்டுமே சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. அந்தளவுக்கு இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது சவாலை கொடுக்கும் இம்மைதானத்தில் இந்த இலக்கை வைத்தே வெற்றி பெறுவதற்கு இந்திய பவுலர்கள் ஓரளவு சிறப்பாக பந்து வீசுவது அவசியமாகும். அந்த உத்வேகத்துடன் வெஸ்ட் இண்டீஸை விட தரமான ஸ்பின்னர்களை கொண்டுள்ள இந்தியா இப்போட்டியில் போராடி வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்கும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

Advertisement