- Advertisement -
உலக கிரிக்கெட்

முடிவுக்கு வந்த 28 தொடர் டெஸ்ட் வெற்றிகள்.. தெ.ஆ வெற்றியை பறித்த மழை.. தப்பிய வெ.இ.. பவுமா வருத்தம்

வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இருப்பினும் மழையால் மிகவும் தாமதமாக துவங்கிய அப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாபிரிக்கா 357 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் தெம்பா பவுமா 86, டோனி டீ ஜோர்ஸி 78 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன் 4 கட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

காப்பாற்றிய மழை:
அதிகபட்சமாக கேசி கார்ட்டி 42, ஜேசன் ஹோல்டர் 36 ரன்கள் எடுத்த நிலையில் தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4, ரபாடா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 124 ரன்கள் முன்னிலையுடன் கள்றங்கிய தென்னாபிரிக்கா எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாடியது.

குறிப்பாக 5வது நாளில் மழை வருவது போல் தெரிந்ததால் கொஞ்சம் வேகமாக விளையாடிய அந்த அணி 173/3 ரன்கள் குவித்து தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக டோனி டீ ஜோர்சி 45, ஐடன் மார்க்ரம் 38, ட்ரிஷன் ஸ்டப்ஸ் 68 (50) ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜோமல் வேரிக்கன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இறுதியில் 298 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்கள் ப்ரத்வெய்ட் 0, லூயிஸ் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் அலிக் அதனேஷ் அரை சதமடித்து 92 ரன்கள் குவித்து வெற்றிக்கு போராடினார். ஆனால் அவரை அவுட்டாக்கிய கேசவ் மகாராஜ் எதிர்ப்புறம் நிதானமாக விளையாடிய கேசி கார்ட்டியை 31 ரன்களில் காலி செய்து அதற்கடுத்ததாக வந்த காவெம் ஹோட்ஜை 29 ரன்களில் அவுட்டாக்கினார்.

அதனால் 192/5 என தடுமாறிய அந்த அணிக்கு ஜேசன் ஹோல்டர் 31*, ஜோஸ்வா டா சில்வா 2* ரன்கள் எடுத்துப் போராடினார். ஆனால் அப்போது குறுக்கே வந்த மழை 5வது நாள் இறுதி வரை பெய்ததால் போட்டி டிராவில் முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர். அதனால் கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தும் தென்னாபிரிக்கா வெற்றியை தவற விட்டது என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் வெற்றி பெறப்போவது எந்த அணி? – வாசிம் ஜாபர் அளித்த கணிப்பு

குறிப்பாக கடைசி நாளில் பிட்ச் பேட்டிங்க்கு சவாலாக இருந்ததால் தங்களின் பவுலர்கள் வெஸ்ட் இண்டீஸை சுருட்டி வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார்கள் என்று தென்னாபிரிக்க கேப்டன் பவுமா போட்டியின் முடிவில் வருத்தத்தை வெளிப்படுத்தினார். அதே காரணத்தால் ஒட்டுமொத்த உலக அளவில் 28 போட்டிகளுக்கு பின் முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. கடைசியாக உலகில் நடைபெற்ற 28 டெஸ்ட் போட்டிகளில் ஏதோ ஒரு அணி வென்றது. அந்த வகையில் மழையின் உதவியுடன் தப்பிய வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக ஆகஸ்ட் 15ஆம் தேதி தென்னாப்பிரிக்காவை இரண்டாவது போட்டியில் சந்திக்கிறது.

- Advertisement -