நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. முன்பெல்லாம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது நிகழாத காரியமாக பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணி தற்போது இரண்டு முறை அங்கு டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக ரஹானே தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக கடந்த முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தது.
இந்நிலையில் மீண்டும் மூன்றாவது முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றியை தொடும் முனைப்புடன் தற்போது இந்திய அணி தயாராகி வருகிறது. அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியும் தற்போது பலமான அணியாக இருப்பதினால் மீண்டும் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டிய உத்வேகத்துடன் தயாராகி வருகிறது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய அந்த அணி தற்போது டெஸ்ட் சாம்பியனாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் இந்த தொடரில் வெற்றி பெறும் அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா, முகமது ஷமி மற்றும் சிராஜ் நல்ல உடற்தகுதியுடன் விளையாடினால் நிச்சயம் மூன்றாவது முறையும் இந்திய அணி அங்கு வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேபோன்று இடது கை வேகப்பந்து அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் அணிக்குள் வர வாய்ப்பு இருக்கிறது.
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் எந்த டீமுக்கும் போகமாட்டார்.. அவர் இங்கயே தான் இருப்பார் – உறுதிசெய்த சவுரவ் கங்குலி
மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய மாயங்க் யாதவ் அந்த தொடரில் விளையாடினால் நிச்சயம் இந்திய அணிக்கு அது சாதகமாக அமையும் என ஜாபர் கூறியுள்ளார். மேலும் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத வீரர்கள் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட வேண்டும் அவர் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



