இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்த ஆண்டு 2025-ல் 17-வது ஐபிஎல் சீசனானது நடைபெற இருக்கிறது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது.
அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் குறித்த பேச்சுக்கள் தற்போதே அனைவரின் மத்தியிலும் அதிகரித்து வருகின்றன. இவ்வேளையில் அடுத்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக வீரர்களுக்கான மெகா ஏலமானது டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், உரிமையாளர்கள் சேர்ந்து ஐபிஎல் நிர்வாகத்துடன் சில விதிமுறைகளுக்காக தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதேபோன்று மெகா ஏலத்திற்கு முன்னதாக முக்கிய வீரர்கள் சிலர் அணிமாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது.
அந்த வகையில் டெல்லி அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் சென்னை அணிக்கு செல்லவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் டெல்லி அணியில் இருந்து ரிஷப் பண்ட் வெளியேற வாய்ப்பே இல்லை என அந்த அணியின் நிர்வாக இயக்குனரான கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து பேசி அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட்டை தக்க வைக்க டெல்லியில் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. ரிஷப் பண்ட் கட்டாயம் வேறு அணிக்கு செல்ல மாட்டார் என்று கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார். அதோடு பயிற்சியாளர் குறித்து பேசிய அவர் கூறுகையில் : டெல்லி நிர்வாகம் இந்திய பயிற்சியாளர்களையே அணியின் பயிற்சியாளராக நியமிக்க விரும்புகிறது.
இதையும் படிங்க : பும்ரா, ஷமி மட்டும் போதாது.. ஆஸி மண்ணில் ஜெய்க்க அந்த 2 இளம் பவுலர்கள் வேணும்.. வாசிம் ஜாபர் கருத்து
ஏனெனில் வெளிநாட்டு பயிற்சியாளர்களால் இந்தியாவில் அதிக நேரம் தங்க முடியாது. ஆனால் இந்திய பயிற்சியாளர்கள் இருக்கும் பட்சத்தில் அணியில் இருக்கும் இளம் வீரர்களை ஒரு ஆண்டில் எப்பொழுது வேண்டுமானாலும் அழைத்து பயிற்சி அளிக்கலாம் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.