IND vs WI : கடைசி 10 மேட்ச்ல இதுதான் முதல்முறையாம். தோல்வி பாதையை முடிவுக்கு கொண்டுவந்த – வெஸ்ட் இண்டீஸ்

WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது.

IND-vs-WI

- Advertisement -

இந்நிலையில் நேற்று ஜூலை 29-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்திய அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய அனுபவ வீரர்கள் அணியில் இடம்பெறாத வேளையில் இந்த வெற்றியை வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றுள்ளதால் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்ற நிலை உருவாகியுள்ளது.

Hope

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை வீழ்த்தியுள்ளதன் மூலம் கடந்த 10 போட்டிகளாக இந்திய அணியிடம் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒரு வெற்றியை பெற்று இறுதியாக ஒரு ஆறுதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

ஒரு காலத்தின் ஜாம்பவான் அணியாக பார்க்கப்பட்ட அந்த அணி இப்படி ஒரு வெற்றியை பெற்றதே பெரிய செய்தியாக பார்க்கும் அளவிற்கு மோசமான நிலையில் அந்த அணியின் நிலைமை தற்போது இருக்கிறது. ஏனெனில் அந்த அணியின் அனுபவ வீரர்கள் பலரும் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் வருமானத்தை எதிர்பார்த்து விளையாடி வருவதால் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி தத்தளித்து வருகிறது.

இதையும் படிங்க : IND vs WI : ரொம்ப நன்றி, 2007 உ.கோ மாதிரியே டீமை மொத்தமா கெடுத்துட்டீங்க – ராகுல் டிராவிட்டை விளாசும் ரசிகர்கள்

அதிலும் குறிப்பாக ஜிம்பாப்வே நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ஐ.சி.சி 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான தகுதி சுற்று போட்டிகளில் கூட கத்துக்குட்டி அணிகளிடம் எல்லாம் தோல்வியை சந்தித்து வரலாற்றில் முதல் முறையாக உலககோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement