இந்திய தொடருக்கு முன்னர் தரமான சம்பவத்தை செய்துள்ள வெ.இண்டீஸ் – ரோஹித் படை சமாளிக்குமா?

Pollard
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3 – 2 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அசத்தியுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 23ஆம் தேதி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. அதில் முதலில் நடந்த 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்று சம பலத்துடன் இருந்ததால் 2 – 2 என இந்த தொடர் சமனில் இருந்தது. அதையடுத்து இன்று நடந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது போட்டியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரை கைப்பற்றியது.

wivseng

- Advertisement -

நம்பர் ஒன் இங்கிலாந்தை சாய்த்த விண்டிஸ் :
முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு 2வது போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாச தோல்வியை இங்கிலாந்து பரிசளித்தது. அதன்பின் 3வது போட்டியில் 20 ரன்கள் வித்தியாச வெற்றியுடன் மீண்டெழுந்த அந்த அணியை மீண்டும் 4வது போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது.

அந்த சமயத்தில் இன்று நடந்த 5வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து வெற்றிபெற 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய இங்கிலாந்து வெற்றியின் விளிம்பு வரை வந்த போதிலும் கடைசி ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை எடுத்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் தனது அணியை அபார வெற்றி பெற செய்தார்.

Holder

இதன் வாயிலாக சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் வலுவான இங்கிலாந்தை அதே தரவரிசையில் 10வது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அசால்டாக தோற்கடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

- Advertisement -

இந்தியாவுக்கு வரும் வெஸ்ட்இண்டீஸ் :
இந்த வெற்றி நடையுடன் இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவுக்கு வரும் அந்த அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்தியாவை சந்திக்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் கிரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதில் ஒருநாள் தொடருக்கான அணியில் அனுபவ வீரர் கிமர் ரோச் திரும்பியுள்ளார்.

pollard

இந்திய ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இதோ:
கிரன் பொல்லார்ட் (கேப்டன்), பாபின் ஆலன், ருமாக் போனர், டேரன் ப்ராவோ, சமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகில் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், நிக்கோலஸ் பூரான், கெமர் ரோச், ரோமரியோ ஷெப்பர்ட், ஓடென் ஸ்மித், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.

- Advertisement -

மேலும் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இருக்கும் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ள அதே வெஸ்ட் இண்டீஸ் அணி அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இந்திய டி20 தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணி இதோ:

Pollard

பிரண்டன் கிங், கைல் மேயேர்ஸ், நிக்கோலஸ் பூரான் (கீப்பர்), ரோவ்மன் போவல், ஜேசன் ஹோல்டர், கிரன் பொல்லார்ட் (கேப்டன்), பாபின் ஆலன், ரோமரியோ ஷெப்பர்ட், ஓடென் ஸ்மித், அகில் ஹொசைன், ஷெல்டன் காட்ரல், ஷாய் ஹோப், ரோஸ்டோன் சேஸ், ஹேடன் வால்ஷ், டேரன் ப்ராவோ, டோமினிக் ட்ராக்ஸ்.

- Advertisement -

தாங்குமா இந்தியா:
இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் கூட வெஸ்ட்இண்டீசை இந்திய அணியால் சமாளித்துவிட முடியும். ஆனால் அதன்பின் நடைபெற உள்ள டி20 தொடரில் அந்த அணியை சமாளிப்பது என்பது ரோகித் சர்மா தலைமையிலான இந்தியாவுக்கு சற்று சவாலான ஒன்றாகும்.

Pollard

ஏனெனில் இன்று மட்டுமல்ல வரலாற்றில் டி20 கிரிக்கெட் துவங்கியது முதல் உலகின் மற்ற அனைத்து நாடுகளை காட்டிலும் வெஸ்ட் இண்டீஸ் ஒரு அதிரடியான அணியாகவே விளங்கி வருகிறது. அந்த அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் சொல்லப்போனால் 11வது இடத்தில் பேட்டிங் செய்பவர் கூட கடைசி நேரத்தில் அசால்டாக சிக்சர்களை பறக்க விடுவதில் வல்லவர்கள் என்றே கூறலாம். எடுத்துக்காட்டாக இங்கிலாந்துக்கு எதிரான இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டியில் கூட 57/6 என வெஸ்ட் இண்டீஸ் அணி திணறிய போது 10வது இடத்தில் களமிறங்கிய அந்த அணியின் அகில் ஹோசைன் வெறும் 16 பந்துகளில் 44* ரன்களை எடுத்து அந்த அணி வெற்றியின் விளிம்பு வரை அழைத்துச் சென்றார்.

அப்போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட போது அவர் 0(ஒய்ட்), 4, 4, 6, 6, 6 என 26 ரன்களை தெறிக்க விட்டபோதிலும் வெஸ்ட்இண்டீஸ் வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றியை தவற விட்டது. இருப்பினும் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்று தன்னை ஒரு வலுவான டி20 அணியாக நிரூபித்துள்ளது.

wi

மேலும் அந்த அணியில் உள்ள கேப்டன் பொல்லார்ட் உட்பட பல வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி இந்திய கால சூழ்நிலைகளை பற்றி நன்கு அறிந்தவர்கள் என்பது அந்த அணிக்கு சாதகமாகும். மறுபுறம் என்னதான் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடினாலும் கடைசியாக நடந்த டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றில் முதல் முறையாக தோல்வியுற்றதுடன் நாக்அவுட் சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் நடையை கட்டியது.

இதையும் படிங்க : பிப்ரவரி 6 ஆம் தேதி வரலாற்றில் முதல் அணியாக இந்திய அணி படைக்கவிருக்கும் சாதனை – விவரம் இதோ

அத்துடன் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் ஒரு வெற்றியை கூட பெற முடியாமல் ஒயிட்வாஷ் படுதோல்வியை சந்தித்தது. எனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக குறிப்பாக டி20 தொடரில் இந்தியா தாக்கு பிடிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement