பிப்ரவரி 6 ஆம் தேதி வரலாற்றில் முதல் அணியாக இந்திய அணி படைக்கவிருக்கும் சாதனை – விவரம் இதோ

Bhuvi
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தனது சொந்த மண்ணில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. வரும் மார்ச் 6ஆம் தேதி முதல் துவங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்திய சுற்றுப்பயணத்தில் முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்பின் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட 2 அணிகளும் ஏற்கனவே தனித்தனியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

INDvsWI

- Advertisement -

1000வது போட்டி :
இதில் முதலில் துவங்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற உள்ளது. அதன் பின் நடைபெறும் டி20 தொடரானது வரும் பிப்ரவரி 16, 17, 20 ஆகிய தேதிகளில் உலக புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில் பங்கேற்பதற்காக விரைவில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அகமதாபாத் நகரில் வலை பயிற்சியில் ஈடுபட உள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஒருநாள் போட்டியானது “ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா பங்குபெறும் 1000வது கிரிக்கெட் போட்டியாகும்”.

ind

புதிய உலகசாதனை :
வரும் பிப்ரவரி 6ஆம் தேதி அஹமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் “மோதிரா கிரிக்கெட் மைதானத்தில்” வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்தியா களமிறங்கும் போது “ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 1000 போட்டிகளில் விளையாடிய முதல் அணி” என்ற சரித்திரம் வாய்ந்த புதிய உலக சாதனையை இந்தியா படைக்க உள்ளது. இந்த தருணமானது நிச்சயம் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகனுக்கும் ஒரு பெருமை மிகுந்த மகிழ்ச்சியான தருணமாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

வரலாற்றிலேயே முதல் முறையாக கடந்த 1974-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் அந்த அணிக்கு எதிராக இந்தியா தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. அப்போட்டியில் அஜித் வடேகர் தலைமையில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் கால் தடம் பதித்து அசத்தியது.

IND

வரலாற்று புள்ளிவிவரம் :
அதன்பின் தற்போது வரை கடந்த 48 ஆண்டுகளில் இந்தியா மொத்தம் 999 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 518 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா 431 தோல்விகளை 1.201 என்ற வெற்றி தோல்வி விகிதத்தில் பதிவு செய்துள்ளது. 9 போட்டிகள் டையில் முடிந்த நிலையில் 41 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய அணிகள் இதோ :
இந்தியா : 999* போட்டிகள்
ஆஸ்திரேலியா : 958 போட்டிகள்
பாகிஸ்தான் : 936 போட்டிகள்

இதையும் படிங்க : பேட்டிங்கில் இந்த இந்திய வீரரை விட நான் பெஸ்ட்! இந்திய வீரரை வம்புக்கு இழுத்த – உமர் குல்

வரலாற்று கேப்டன்கள்:
இந்தியாவுக்காக மைல்கல் போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த வீரர்கள் இதோ:
100வது போட்டி : கபில் தேவ்
200வது போட்டி : முகமது அசாருதீன்
300வது போட்டி : சச்சின் டெண்டுல்கர்
400 ஆவது போட்டி : முகமது அசாருதீன்
500வது போட்டி : சௌரவ் கங்குலி
600வது போட்டி : விரேந்தர் சேவாக்
700வது போட்டி : எம்எஸ் தோனி
800வது போட்டி : எம்எஸ் தோனி
900வது போட்டி : எம்எஸ் தோனி
1000வது போட்டி : ரோஹித் சர்மா*

Advertisement