பேட்டிங்கில் இந்த இந்திய வீரரை விட நான் பெஸ்ட்! இந்திய வீரரை வம்புக்கு இழுத்த – உமர் குல்

Gul-1
- Advertisement -

கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதி கொள்ளும் போட்டிகளில் அவ்வப்போது சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் பஞ்சம் இருக்காது. களத்தில் அவ்வப்போது இந்த 2 அணிகளை சேர்ந்த ஏதாவது சில வீரர்கள் சண்டையில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும். இதனாலேயே இந்த 2 அணிகள் மோதும் போட்டிகளுக்கு உலக அளவில் பல ரசிகர்கள் உள்ளார்கள். சில நேரங்களில் களத்திற்கு வெளியே இந்த 2 நாடுகளை சேர்ந்த ஏதேனும் சில வீரர்கள் குறிப்பாக ஊடகங்களில் வாய் தகரார் செய்து வார்த்தை போரில் ஈடுபடுவதெல்லாம் சர்வ சாதாரணமாகும்.

INDvsPAK

- Advertisement -

நான் தான் பெஸ்ட் :
அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கை விட தாம் சிறந்த பேட்டர் என பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் உமர் குல் புதிய கருத்து ஒன்றை காற்றில் பறக்க விட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் ஓமன் நாட்டில் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெற்று வந்த “லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் லீக் டி20 தொடர்” முடிவுக்கு வந்தது.

அதில் லீக் சுற்றில் அசத்திய ஆசிய லயன்ஸ் மற்றும் வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின. அதில் வேர்ல்ட் ஜெய்ன்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரின் போது இந்திய மகாராஜாஸ் அணியில் ஹர்பஜன் சிங் விளையாடினார். அதேபோல் ஆசிய லயன்ஸ் அணியில் உமர் குல் இடம் பெற்றிருந்தார்.

gul

ஆட்டநாயகன் விருது பேசும்:
அந்த தொடரின் முடிவில் தான் உமர் குல் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியுள்ளதாவது, “ஹர்பஜனும் சிறப்பாக பேட்டிங் செய்ய கூடியவர். ஆனால் எனது பேட்டிங்க்காக ஒரு உலகக்கோப்பை போட்டியில் நான் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளேன். எனவே ஹர்பஜன் சிங்கை விட பேட்டிங்கில் நான் தான் சிறந்தவன்”

- Advertisement -

என இந்திய வீரர் ஹர்பஜன் சிங்கை கலாய்க்கும் வகையில் கலகலப்பான கருத்தை தெரிவித்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 135 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் 76/7 என தடுமாறியது.

harbhajan

அப்போது களமிறங்கிய உமர் குல் வெறும் 17 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 32 ரன்கள் எடுத்து பாகிஸ்தானின் 2 விக்கெட் வித்தியாசத்திலான த்ரில் வெற்றிக்கு பங்காற்றினார். அத்துடன் அந்த போட்டியில் பந்து வீச்சில் 1 விக்கெட் எடுத்திருந்த காரணத்தால் அந்த போட்டியின் ஆட்ட நாயகனாக உமர் குல் அறிவிக்கப்பட்டார். அதை வைத்து தான் இவர் தற்போது ஹர்பஜனை விட நான் சிறந்த பேட்ஸ்மேன் என மார் தட்டுகிறார்.

நியாயம் வேணாமா :
சரி அவர் கூறுவது போல உண்மையாகவே அவர் ஹர்பஜனை விட பேட்டிங்கில் சிறந்தவரா என பார்ப்போம். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து ஹர்பஜன் சிங் மொத்தம் 3570 ரன்களை எடுத்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 சதங்களை அடித்துள்ளார்.

மறுபுறம் 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து உமர் குல் வெறும் 1199 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். ஒரு சதம் கூட அடித்ததே கிடையாது. அப்படிப்பட்ட நிலைமையில் வெறும் ஒரு ஆட்டநாயகன் விருதை வைத்துக்கொண்டு ஹர்பஜன் சிங்கை விட சிறந்த பேட்டர் என உமர் குல் கம்பு சுழற்றுவது நியாயமே இல்லை என அவர் உணர வேண்டும். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் இருவருமே ஒரு முழுமையான பேட்டர் கிடையாது வெறும் “டைல் எண்டர்கள்” என்பதுதான் நிதர்சனமான உண்மையாகும்.

Advertisement