
நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் 44 ஆவது போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெஸ்ட் இண்டீஸ் அணியானது 107 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றியை ருசித்தது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக அதிகபட்சமாக சிம்ரன் ஹெட்மயர் 85 ரன்களையும், ரோவ்மன் பவல் 59 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.4 ஓவர்களில் 147 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை ருசித்தது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அடித்த 254 ரன்கள் மூலம் இரண்டாவது அணியாக மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் : டி20 உலககோப்பை போட்டிகளில் இலங்கை அணி மட்டுமே 250+ ரன்களை குவிந்திருந்தது. இவ்வேளையில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி எடுத்த 254 ரன்கள் மூலம் இலங்கை அணிக்கு அடுத்து டி20 உலககோப்பை போட்டிகளில் 250+ ரன்களை அடித்த இரண்டாவது அணியாக சாதனை நிகழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க : சர்வதேச டி20 போட்டிகளில் லாசித் மலிங்காவின் மாபெரும் சாதனையை காலி செய்த – ஜஸ்ப்ரீத் பும்ரா
வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இந்த பிரமாண்ட வெற்றி இந்திய அணியை சிக்கலுக்கு தள்ளியுள்ளது. ஏனெனில் தற்போதைய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி நல்ல ரன் ரேட்டுடன் முன்னிலையில் இருப்பதால் இந்திய அணி அடுத்து வரும் இரண்டு சூப்பர் 8 சுற்று போட்டிகளிலும் பிரமாண்ட வெற்றியை பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும் என்கிற இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.