சர்வதேச டி20 போட்டிகளில் லாசித் மலிங்காவின் மாபெரும் சாதனையை காலி செய்த – ஜஸ்ப்ரீத் பும்ரா

Bumrah and Malinga
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026 டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக நேற்றைய போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வியை சந்தித்து இருந்தாலும் தனி ஒருவராக பும்ரா அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.

லாசித் மலிங்காவின் சாதனையை முறியடித்த ஜஸ்ப்ரீத் பும்ரா :

அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக மற்ற இந்திய இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிய வேளையில் ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டும் மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

அவர் எடுத்த இந்த 3 விக்கெட்டுகளில் ஒரு விக்கெட்டை கிளீன் போல்டாக எடுத்தார். தென்னாப்பிரிக்க அணியின் துவக்க வீரரான குவிண்டன் டி காக்கின் விக்கெட்டை அவர் போல்டு மூலம் வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முன்னாள் இலங்கை வீரரான லாசித் மலிங்காவின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடித்துள்ளார்.

அந்த வகையில் பும்ரா நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை போல்ட் வகையில் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக இலங்கை அணியின் முன்னாள் வீரரான லாசித் மலிங்கா முதலிடத்தில் இருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 43 முறை கிளீன் போல்ட் மூலம் விக்கெட் எடுத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : பர்ஸ்ட் ரிங்கு சிங்கை இந்த இடத்தில் விளையாட வையுங்க.. அதுதான் நல்லது – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

இவ்வேளையில் நேற்று பும்ரா போல்ட் மூலம் குவிண்டன் டி காக்கின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் 44 முறை சர்வதேச டி20 போட்டிகளில் போல்ட் மூலம் விக்கெட் எடுத்து அதிகமுறை போல்ட் மூலம் விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளராக லாசித் மலிங்காவின் சாதனையை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement