IND vs WI : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை இப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்துவது – இதுவே முதல்முறையாம்

IND-vs-WI
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நடைபெற்று முடிந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது டி20 தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பினை பிரகாசப்படுத்தியுள்ளது.

ஏனெனில் இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணியானது நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தற்போது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்கிற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதோடு அடுத்து வரும் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றால் கூட வெஸ்ட் இண்டீஸ் அணிந்த இந்த டி20 தொடரை கைப்பற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கயானா நகரில் நேற்று நடைபெற்ற இந்த டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் குவித்தது. பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது துவக்கத்திலேயே அடுத்தடுத்து இரண்டு ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களான நிக்கோலஸ் பூரான், ராவ்மன் பவல், ஹெட்மயர் ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக ஓரளவு சுதாரித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது கடைசி கட்டத்தில் அகீல் ஹுசேன், அல்சாரி ஜோசப் ஆகியோரது உதவியுடன் வெற்றியை ருசித்தது.

- Advertisement -

இறுதியாக இந்த போட்டியில் 18.5 ஓவர்களில் எட்டு விக்கெட்டை இழந்து 155 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு எதிராக முதல்முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க : IND vs WI : ரிஷப் பண்ட் சாதனையை உடைத்து ரோஹித் சர்மாவின் – 17 வருட ஆல் டைம் சாதனையை சமன் செய்த திலக் வர்மா

அந்த சாதனை யாதெனில் : இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ச்சியாக இந்திய அணியை இரண்டு டி20 போட்டிகளில் வீழ்த்தியதே கிடையாது. ஆனால் நேற்றைய போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தற்போது முதல் முறையாக அந்த அணி டி20 வரலாற்றில் இந்திய அணியை இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து வீழ்த்தி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement