IND vs WI : ரிஷப் பண்ட் சாதனையை உடைத்து ரோஹித் சர்மாவின் – 17 வருட ஆல் டைம் சாதனையை சமன் செய்த திலக் வர்மா

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோற்று ஆரம்பத்திலேயே பின்னடவை சந்தித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்தியா ஆகஸ்ட் 6ஆம் தேதி கயானாவில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்து போராடி 20 ஓவரில் 152/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இளம் வீரர் திலக் வர்மா 5 பவுண்டரி 1 சிக்ருடன் 51 (41) ரன்களும் இஷான் கிசான் 27 (23) ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ரொமாரியா செஃபார்ட், அகில் ஹொசைன், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 153 ரன்களை துரத்திய வெஸ்ட் இண்டீஸ்க்கு ப்ரெண்டன் கிங் 0, கெய்ல் மேயர்ஸ் 15, ஜான்சன் சார்லஸ் 2 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் நிக்கோலஸ் பூரான் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 67 (40) ரன்களும் கேப்டன் ரோவ்மன் போவல் 21 ரன்களும் ஹெட்மயர் 22 (22) ரன்களும் எடுத்தனர். அதனால் 18.5 ஓவரிலேயே 155/8 ரன்களை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 0* (5) என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

அசத்தல் வர்மா:
மறுபுறம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா 20 ரன்களை எடுக்க தவறிய இந்தியாவுக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக கேப்டன் பாண்டியா 3 விக்கெட்டுகளும் சஹால் 2 விக்கெட்களை எடுத்து போராடியும் டெத் ஓவரில் சொதப்பியதால் தோல்வியே கிடைத்தது. முன்னதாக இந்த தொடரில் முதல் முறையாக அறிமுகமான திலக் வர்மா சவாலான பிட்ச்சை கொண்டிருந்த முதல் போட்டியிலேயே இதர வீரர்களை காட்டிலும் அதிரடியாக 39 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடினார்.

அதே போலவே இப்போட்டியிலும் சூரியகுமார் முதல் ஹர்திக் பாண்டியா வரை அனுபவமிக்க வீரர்களை விட சவாலான பிட்ச்சில் மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் 51 (41) ரன்கள் அடித்து சர்வதேச கிரிக்கெட்டில் தம்முடைய முதல் அரை சதத்தை அடித்து இந்தியாவையும் ஓரளவு காப்பாற்றினார். இத்தனைக்கும் வெறும் 20 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் தமக்கு கிடைத்த வாய்ப்பில் சவாலான சூழ்நிலைகளிலும் அசத்தலாக செயல்பட்டு அரை சதமடித்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 20 வயதுக்குள் அரை சதமடித்து 2வது இந்திய வீரர் என்ற தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவின் 17 வருட ஆல் டைம் சாதனையை திலக் வர்மா சமன் செய்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன் 2007 டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா தம்முடைய 20 வயதில் 50 (40) ரன்கள் அடித்து முதல் இந்திய வீரராக அந்த சாதனையை படைத்துள்ளார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் அரை சதமடித்த 2வது இந்திய வீரர் என்ற ரிஷப் பண்ட் சாதனையை தகர்த்த அவர் புதிய சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 20 வருடம் 143 நாட்கள்
2. திலக் வர்மா : 20 வருடம் 271 நாட்கள்*
3. ரிசப் பண்ட் : 21 வருடம் 38 நாட்கள்

மேலும் கடந்த 2 போட்டிகளிலுமே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோரை (39, 51) பதிவு செய்த அவர் டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய முதலிரண்டு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இது போக சர்வதேச டி20 போட்டிகளில் முதல் 2 இன்னிங்ஸில் அதிக ரன்கள் (90) அடித்த இந்திய வீரர் என்ற சூரியகுமார் (89) சாதனையையும் தகர்த்துள்ள அவர் தம்முடைய கேரியரை சிறப்பாக துவங்கியுள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க:IND vs WI : 2016-க்கு அப்புறம் இப்போதான் எங்களுக்கு நல்ல சேன்ஸ் கெடச்சிருக்கு. வெற்றிக்கு பிறகு – ராவ்மன் பவல் பேட்டி

குறிப்பாக தரமான இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் திண்டாடும் இந்தியாவுக்கு அவர் வரப்பிரசாதமாக வந்துள்ளதாகவும் ரசிகர்கள் பாராட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக ஹைதெராபாத்தை சேர்ந்த அவர் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக அறிமுகமாகி கடந்த வருடம் அசத்திய நிலையில் இந்த வருடம் மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பிலும் மிகச் சிறப்பாக செயல்படுத்துவதால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் அவரை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement