IND vs WI : 2016-க்கு அப்புறம் இப்போதான் எங்களுக்கு நல்ல சேன்ஸ் கெடச்சிருக்கு. வெற்றிக்கு பிறகு – ராவ்மன் பவல் பேட்டி

Rovman-Powell-1
- Advertisement -

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த நாட்டில் நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது டி20 தொடரையாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறது.

அந்த வகையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது டி20 போட்டியில் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணியானது நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

அதன்படி நேற்று கயானா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றியின் இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்து இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராவ்மன் பவல் கூறுகையில் : தற்போது நாங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறோம். கடந்த 2016-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக நாங்கள் டி20 தொடரை கைப்பற்றியது கிடையாது.

- Advertisement -

எனவே இம்முறை அதற்கான நல்ல வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருப்பதாக நினைக்கிறேன். இந்த போட்டியில் நான் பவுலர்களை பவர் பிளேவின் போது ஒவ்வொரு ஓவர் மட்டுமே வீச சொன்னேன். ஏனெனில் மைதானம் மிகவும் சூடாக இருந்தது. அதுமட்டுமின்றி ஒரே பவுலரே இரண்டு ஓவர் வீசினால் இந்திய பேட்ஸ்மேன்கள் செட் ஆகி விடுவார்கள் என்பதனால் அனைத்து பவுலர்களுக்குமே ஒரு ஓவரை மட்டுமே வழங்கினேன்.

இதையும் படிங்க : IND vs WI : உண்மையிலே சொல்லனும்னா 2 ஆவது போட்டியிலும் நாங்க தோக்க இதுவே காரணம் – பாண்டியா வருத்தம்

அதோடு இந்திய அணி பந்துவீசும் போது அவர்களிடம் சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய் என மூன்று ஸ்பின்னர்கள் இருந்தால் இடது கை வீரர்கள் வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அந்த வகையில் இந்த போட்டியில் பூரான் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் இருந்தது எங்களுக்கு கவுண்டர் அட்டாக் கொடுக்க உதவியதாகவும் ராவ்மன் பவல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement