வீடியோ : 9வது இடத்தில் ரபாடாவை தெறிக்க விட்ட செஃபார்ட் தனித்துவ சாதனை, தெ.ஆ’வை சாய்த்த வெ.இ த்ரில் வெற்றி

- Advertisement -

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அங்கு முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தாலும் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை மழையின் உதவியுடன் 1 – 1 (3) என்ற கணக்கில் சமன் செய்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 259 ரன்கள் இலக்கை வெறித்தனமாக துரத்தி உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்கா தக்க பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்தது.

அதனால் சமனில் இருந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி மார்ச் 28ஆம் தேதியான நேற்று இரவு ஜோகன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மீண்டும் அதிரடியாக செயல்பட்டு 220/8 ரன்கள் குவித்தது. ஆனால் அந்த அணிக்கு ப்ரண்டன் கிங் 36 (25), கெய்ல் மேயர்ஸ் 17 (10), நிக்கோலஸ் பூரான் 41 (19), ரோவ்மன் போவல் 11 (4), ரைஃபர் 27 (18), ஜேசன் ஹோல்டர் 13 (9) என களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாட முயற்சித்து நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய ரன்களாக மாற்றாமல் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அசத்திய வெஸ்ட் இண்டீஸ்:
அதன் காரணமாக 15.4 ஓவரில் 161/8 என தடுமாறிய அந்த அணி 200 ரன்களை தொடுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் 9வது இடத்தில் களமிறங்கிய ரோமாரியா செஃபார்ட் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்களை குவித்தார். குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் முதன்மை வேகப்பந்து வீச்சளார் ககிஸோ ரபாடா வீசிய கடைசி ஓவரில் 2, 6, 4, 6, 6, 2 என வெறித்தனமாக பேட்டிங் செய்த அவர் 26 ரன்களை குவித்து மொத்தமாக 2 பவுண்டரி 3 சிக்சருடன் 44* (22) ரன்கள் விளாசி சூப்பர் பினிஷிங் கொடுத்தார். மேலும் 14* (9) ரன்கள் எடுத்த அல்சாரி ஜோசப்புடன் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியை தலைகீழாக மாற்றிய அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 9 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி 2 முறை 50+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையும் படைத்தார்.

இதற்கு முன் கடந்த 2022 ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரின் ஒரு போட்டியில் அகில் ஹொசைனுடன் இணைந்து இதே போல அவர் 72* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். மறுபுறம் கடைசி நேரத்தில் பந்து வீச்சில் சொதப்பிய தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி, ரபாடா மற்றும் அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 221 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு குயின்டன் டீ காக் 21 (21) ரன்களில் ஆரம்பத்திலேயே அவுட்டானார். அடுத்து வந்து அதிரடி காட்டிய ரிலீ ரோசவ் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (21) ரன்களில் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 11 (11) ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் 11 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்த மற்றொரு தொடக்க ரீஸா ஹென்றிக்ஸை 19வது ஓவரில் 83 (44) ரன்களில் அவுட்டாக்கி திருப்புமுனையை ஏற்படுத்திய அல்சாரி ஜோசப் வேன் பர்னல் 2 (2) ஹென்றிச் க்ளாஸென் 6 (2) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களையும் சாய்த்து 4 ஓவரில் 40 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் கடைசியில் கேப்டன் ஐடன் மார்க்ரம் 35* (18) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 213/6 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்கா போராடி தோல்வியை சந்தித்தது.

மறுபுறம் பேட்டிங், பவுலிங் ஆகிய துறைகளில் கடைசி நேரத்தில் மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 2 – 1 (3) என்ற கணக்கில் தென்னாபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

இதையும் படிங்க: IPL 2023 : ரோஹித் சர்மாவால் எல்லா மேட்ச்யும் விளையாட முடியாது. இவர்தான் புதிய கேப்டன் – வெளியான ரிப்போர்ட்

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய அல்சாரி ஜோசப் ஆட்டநாயகனாகவும் தொடர் முழுவதும் அசத்திய ஜான்சன் சார்லஸ் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

Advertisement