IPL 2023 : ரோஹித் சர்மாவால் எல்லா மேட்ச்யும் விளையாட முடியாது. இவர்தான் புதிய கேப்டன் – வெளியான ரிப்போர்ட்

Rohit
- Advertisement -

நடப்பு 2023-வது ஆண்டிற்கான பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நாளை மறுதினம் மார்ச் 31-ஆம் தேதி துவங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரானது இந்தியாவிலேயே நடைபெற இருப்பதாலும், அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் போட்டிகளில் பங்கேற்ப இருப்பதினாலும், ரசிகர்கள் நேரில் வந்து போட்டிகளை காண இருப்பதாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது மிகப்பெரிய அளவில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

IPL 2022 (2)

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வரும் வேளையில் ஒரு சில அணிகளின் நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி இருப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது. அந்த வகையில் மும்பை அணியிலும் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஜே ரிச்சர்ட்சன் ஆகியோர் விலகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை தந்துள்ளது.

அதேபோன்று சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரது பேட்டிங் பார்மும் அவர்களுக்கு கவலை அளிக்கும் விதமாகவே உள்ளது. இதன் காரணமாக ரோகித் சர்மா தான் மும்பை அணியை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்கிற சூழலில் தற்போது மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் அனைத்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

rohith 2

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 உலகக் கோப்பை கிரிக்கெட் என இரண்டிலுமே இந்திய அணியை தலைமை தாங்கி வழிநடத்த இருப்பதால் அவரது பணிச்சுமை காரணமாக ஐபிஎல் போட்டிகளில் முழுவதுமாக விளையாட மாட்டார் என்றும் இடையிடையே ஒரு சில போட்டிகளில் அவர் ஓய்வு எடுத்துக் கொள்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

இப்படி ரோகித் சர்மா ஓய்வெடுக்கும் அனைத்து போட்டிகளுக்குமே சூரியகுமார் யாதவ் தான் தலைமை தாங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக தொடர்ச்சியாக அவதிப்பட்டு வரும் வேளையில் ரோகித் சர்மாவும் காயம் அடைந்தால் நிலைமை மோசமாகிவிடும் என்பதற்காகவே இந்திய அணியின் நிர்வாகத்தின் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IPL 2023 : இதுதான் விதியோட விளையாட்டா? ஒரே மாதத்தில் தலைகீழாக மாறிய – பஞ்சாப் வீரரின் நிலை

இந்திய அணியில் தற்போது ஜஸ்ப்ரீத் பும்ரா, ஷ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா என பல்வேறு வீரர்கள் காயம் அடைந்து இருப்பதால் இனியும் எந்த வீரர்களும் காயமடையக்கூடாது என்பதன் முன்னெச்சரிக்கையாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement