IPL 2023 : இதுதான் விதியோட விளையாட்டா? ஒரே மாதத்தில் தலைகீழாக மாறிய – பஞ்சாப் வீரரின் நிலை

Sandeep-Sharma
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளானது வரும் மார்ச் 31-ஆம் தேதி துவங்கி மே 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவிக்கின்றன. இந்த முதல் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது.

IPL 2022 (2)

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன்பிறகு கோப்பையை வெல்லாமல் இருந்து வரும் வேளையில் கடந்த சீசனில் பைனல் வரை சென்று குஜராத் அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பை காட்டி வருகிறது. ராஜஸ்தான் அணி ஏற்கனவே பல்வேறு வீரர்களை தங்களது அணியில் வைத்திருக்கும் வேளையில் தற்போது மேலும் சில வீரர்களை இணைத்து அந்த அணியை வலுப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் சஞ்சு சாம்சன் தலைமையிலான இந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக மாற்றுவீரராக சந்தீப் ஷர்மாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசும் பிரசித் கிருஷ்ணா இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவை தந்துள்ளது.

Sandeep-1

இருந்தாலும் தற்போது அவருக்கு பதிலாக மாற்றுவீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள சந்தீப் சர்மா ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் உள்ளவர் என்பது மட்டுமின்றி பவர்பிளே ஓவர்களிலும் சிறப்பாக பந்து வீசுபவர் என்பதால் அவருடைய சேர்க்கை அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அவரை அந்த அணி இந்த சீசனுக்கு முன்னதாக மினி ஏலத்திற்கு முன்னர் விடுவித்து இருந்தது. அதன் பின்னர் 50 லட்ச ரூபாய் அடிப்படை விலையாக தனது பெயரை மினி ஏலத்தில் பதிவு செய்திருந்த சந்தீப் சர்மாவை யாரும் வாங்கவில்லை. அதனை தொடர்ந்து இத்தனை ஆண்டு காலமாக கிரிக்கெட் விளையாடும் என் மீது நம்பிக்கை வைக்காமல் என்னை எந்த ஒரு அணியும் வாங்காதது வருத்தம் அளிக்கிறது என்ற ஆதங்கத்தை அவர் வெளிப்படையாகவே முன் வைத்திருந்தார்.

இதையும் படிங்க : IPL 2023 : கேப்டன் கூல் தோனி அவ்ளோ கோபப்பட்டு பார்த்ததே இல்ல – 13 வருட பழைய நிகழ்வை பகிர்ந்த ரெய்னா

இந்நிலையில் தற்போது அவரை மாற்றுவீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியதன் மூலம் அவருடைய இக்கட்டான நிலை மாறியுள்ளது. இதுவரை ஐபிஎல் கிரிக்கெட்டில் 104 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 114 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement