
இந்திய அணியின் நட்சத்திர இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் கடந்த சில ஆண்டுகளாகவே முதன்மை இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தி தனது பார்மை நிரூபித்த அவருக்கு நியூசிலாந்து அணிக்கு எதிரான நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக கட்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.
அந்த தொடரில் சஞ்சு சாம்சன் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த இஷான் கிசான் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது நடைபெற்று வரும் 2026 உலககோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியிலும் துவக்க வீரராக விளையாடி வருகிறார். அவர் நல்ல பார்மில் இருப்பதால் நிச்சயம் இந்த உலகக்கோப்பை தொடரிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான நடப்பு 2025-26 ஆண்டிற்கான மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் இஷன் கிஷனுக்கு இடம் வழங்கப்படவில்லை. அவரை தவிர்த்து 30 வீரர்களுக்கு ஊதிய ஒப்பந்த பட்டியலில் இடம் கிடைத்த வேளையில் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய இஷான் கிஷனுக்கு ஏன் ஒப்பந்தப்பட்டியலில் கடைசி பிரிவில் கூட இடம் கிடைக்கவில்லை? என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு வெகு சில வாரங்களுக்கு முன்னர் தான் மீண்டும் இந்திய அணியுடன் இஷான் கிஷன் இணைந்துள்ளார். எனவே அவர் இந்திய அணியின் எதிர்கால திட்டத்தில் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடாத அவர் டி20 போட்டியில் மட்டும் தான் விளையாடுகிறார். அதிலும் தற்போது இரண்டு தொடர்கள் மட்டும்தான் விளையாடி உள்ளார்.
இதையும் படிங்க : இந்த ஒரு திறமை போதும்.. அர்ஷ்தீப் சிங்கை தொடர்ந்து விளையாட வையுங்க – ரிக்கி பாண்டிங் கருத்து
எனவே அவர் தொடர்ந்து இந்திய அணியுடன் பயணிக்கும் பட்சத்தில் அவருக்கு ஊதிய ஒப்பந்த பட்டியல் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆண்டு முழுவதும் அவர் தொடர்ந்து இந்திய அணியுடன் இணைந்து விளையாடினால் நிச்சயம் அடுத்த ஆண்டு அவருக்கு இடம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.