IND vs WI : ரோஹித் சாதிச்சுட்டாரா? மொத்த பழியையும் அவர் மேல போட்டு ஏன் கழற்றி விட்டீங்க – தேர்வுக்குழுவை விளாசிய கவாஸ்கர்

Sunil Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் தோல்வியை சந்தித்து வெறும் கையுடன் வெளியேறியது. இத்தனைக்கும் தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக இருந்தும் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்ற இந்தியா ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்ந்தெடுக்காதது தோல்வியை கொடுத்தது. அதிலும் குறிப்பாக நவீன கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காதது தோல்விக்கு முக்கிய காரணமானது.

TEam India Rohit Sharma

- Advertisement -

அதனால் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த ரோகித் சர்மா இப்போட்டியிலும் வெற்றியை பதிவு செய்ய தவறியதால் பதவி விலக வேண்டும் என்று விமர்சித்த ரசிகர்கள் புதிய அணியை உருவாக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் அடுத்ததாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கவாஸ்கர் அதிருப்தி:
அதில் ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட், நவ்தீப் சைனி, முகேஷ் குமார் ஆகிய இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட் வீரராக போற்றப்படும் செட்டேஸ்வர் புஜாரா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதால் அவருடைய கேரியர் முடிந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மெதுவாக விளையாடும் ஸ்டைலை கொண்ட அவர் கடந்த 10 வருடங்களில் நங்கூரமாக நின்று நிறைய போட்டிகளில் மறக்க முடியாத வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

Pujara 1

குறிப்பாக 2019/20 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் 500க்கும் மேற்பட்ட ரன்களை அடித்து விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2020/21 தொடரில்ம் அதிக ரன்கள் எடுக்கவில்லை என்றாலும் உடம்பில் அடி வாங்கி முக்கிய ரன்களை எடுத்து மீண்டும் 2 – 1 (4) என்ற கணக்கில் வெற்றி பெறுவதற்கு உதவினார். ஆனால் அதன்பின் 2019க்குப்பின் சதமடிக்காமல் தவித்ததால் 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்ட அவர் மனம் தளராமல் கவுண்ட்டி தொடரில் அபாரமாக செயல்பட்டு மீண்டும் ஜூலை மாதம் கம்பேக் கொடுத்து கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பினார்.

- Advertisement -

மேலும் 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தன்னுடைய 100வது போட்டியில் விளையாடி சாதனை படைத்த அவர் ஃபைனலில் சொதப்பிய காரணத்தால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஃபைனலில் இந்திய பேட்டிங் துறை சொதப்பியதற்கான மொத்த பழியையும் புஜாரா மீது போட்டு கழற்றி விட்டது ஏன் என்று கேட்கும் சுனில் கவாஸ்கர் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் செய்த தவறுகள் மட்டும் மூடி மறைக்கப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளார். அத்துடன் 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்த விராட் கோலி தொடர்ந்து வாய்ப்பு பெறும் நிலையில் புஜாரா மட்டும் ஒவ்வொரு முறையும் பலிக்காடாக இருந்து வருவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Pujara 2

“அவர் ஏன் நீக்கப்பட்டார்? நம்முடைய பேட்டிங் தோல்விக்காக அவர் ஏன் பலிகாடாக உருவாக்கப்பட்டுள்ளார்? அவர் இந்திய கிரிக்கெட்டின் விஸ்வாசமான வீரர். இந்தியாவுக்காக விஸ்வாசமாக செயல்பட்டு சாதனை படைத்தவர். ஆனால் சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான ரசிகர்களை கொண்டிருக்காத காரணத்தால் அவரை நீங்கள் எளிதாக நீக்கியுள்ளீர்கள். இது நான் புரிந்து கொள்வதற்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது”

- Advertisement -

“அதே ஃபைனலில் சொதப்பிய மற்றவர்கள் மீண்டும் வாய்ப்பு பெற்றதற்கும் அவர் நீக்கப்பட்டதற்குமான அளவுகோல் என்ன? இது போன்ற தேர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் இப்போதெல்லாம் தேர்வுக்குழுவினர் ஊடகங்களிடம் நேரடியாக பேசுவதில்லை. கவுண்டி தொடரில் விளையாடும் அவர் நிறைய உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்போதுள்ள வீரர்கள் 30 – 40 வயது முதல் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தொடர்ந்து விளையாடலாம்”

Sunil Gavaskar Pujara

இதையும் படிங்க:என்னை பொறுத்தவரை கம்பீர் பண்ணது தப்பு. அவர் கோலியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாக் வீரர் கருத்து

“ஏனெனில் வயது என்பது வெறும் நம்பராக நான் பார்க்கிறேன். மேலும் ஃபைனலில் ரகானே தவிர்த்து நம்முடைய பேட்டிங்கில் அனைவருமே சொதப்பினர். அப்படிப்பட்ட நிலையில் புஜாராவை மட்டும் தேர்வுக்குழுவினர் ஏன் நீக்கினார்கள் என்பதை விளக்க வேண்டும்” என கூறினார்.

Advertisement