என்னை பொறுத்தவரை கம்பீர் பண்ணது தப்பு. அவர் கோலியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாக் வீரர் கருத்து

Ahmed-Shehzad
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியின் போது லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகையில் பெங்களூர் அணியின் முன்னணி வீரரான விராட் கோலிக்கும், லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவீன் உல் ஹக்கிற்கும் இடையே இடையே பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த செய்தி அப்போது சமூகவலைதளத்தில் அதிக அளவு பேசப்படும் செய்தியாகவும் மாறியது.

Naveen ul Haq 1

- Advertisement -

ஏனெனில் களத்தில் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஆகியோர் காரசாரமாக வார்த்தை மோதலில் ஈடுபட்ட வேளையில் போட்டி முடிந்த பிறகும் அவர்களது மோதல் தொடர்ந்தது. அதன் காரணமாக இரு அணி வீரர்களும் கை கொடுக்கும்போது நவீன் மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் முறைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் இந்த வாக்குவாதத்தின் இடையே கம்பீர் குறுக்கிட்டு அவரும் வாக்குவாதம் செய்ய மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் நிர்வாகம் சம்பந்தப்பட்ட மூன்று பேருக்குமே அபராதம் விதித்து அதிரடி காட்டி இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான அணியின் வீரரான அகமது ஷெசாத் என்பவர் விராட் கோலி மற்றும் கம்பீர் மோதல் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் கூறியதாவது :

Virat Kohli Gambhir.jpeg

விராட் கோலியின் மீது நான் நல்ல மரியாதை வைத்திருக்கிறேன். எனக்கு கிரிக்கெட்டில் எந்த சந்தேகம் என்றாலும் அவரிடம் தான் கேட்கிறேன். அவரும் என்னிடம் மிகவும் எளிமையாக பழகி எனக்கு அறிவுரைகளை வழங்குகிறார். கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோரது மோதல் குறித்து பதில் சொல்வது என்னுடைய வேலை இல்லை.

- Advertisement -

இருந்தாலும் நீங்கள் கேட்பதால் சொல்கிறேன். என்னுடைய கருத்தின்படி கம்பீர் செய்தது தான் தவறு என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர் தனது பெருந்தன்மையை காட்ட வேண்டும் என்று நினைத்தால் விராட் கோலியை தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் என்னோட டேலண்ட்டை காட்ட முடியாம போக இதுதான் காரணம் – கேதார் ஜாதவ் வேதனை

ஏனெனில் எனது வாழ்நாளில் எந்த ஒரு அணி நிர்வாகத்தின் உறுப்பினரும் மைதானத்தில் வீரர்களுடன் நேரடியாக சண்டையில் ஈடுபட்டதில்லை. எனவே கோலியிடம் கம்பீர் மன்னிப்பு கேட்டால் அவரை பெரிய மனிதராக ஏற்றுக் கொண்டு அவருடைய பெருந்தன்மையை நாம் பாராட்டலாம் என அகமது ஷெசாத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement