பெங்களூருவில் காத்திருக்கும் மழை.. நியூஸிலாந்து – இலங்கை போட்டி ரத்தானால்.. இந்தியாவுடன் மோத பாகிஸ்தான் வருமா?

PAK AFG NZ
- Advertisement -

உச்சகட்டத்தை எட்டியுள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 9ஆம் தேதி மதியம் 2 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை தொடர்ந்து செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் 4வது அணியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதாவது இப்போட்டியில் விளையாடும் இலங்கை ஏற்கனவே 6 தோல்விகளை பதிவு செய்து லீக் சுற்றுடன் வெளியேறி விட்டது. ஆனால் 8 போட்டிகளில் தலா 4 வெற்றி தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை வைக்க இப்போட்டியில் எப்படியாவது வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது.

- Advertisement -

காத்திருக்கும் மழை:
அதே சமயம் நியூசிலாந்துக்கு போட்டியாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியல் 5, 6 ஆகிய இடங்களில் இருக்கின்றன. இதில் பாகிஸ்தான் (+0.036) மற்றும் ஆப்கானிஸ்தான் (-0.338) அணிகளை விட அதிக ரன் ரேட்டை (+0.398) கொண்டிருப்பதன் காரணமாக 4வது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து இப்போட்டியில் இலங்கையை சாதாரணமாக தோற்கடித்தாலே செமி ஃபைனல் செல்வதற்கான வாய்ப்பு 90% உறுதியாகிவிடும்.

ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் செமி ஃபைனல் செல்ல இப்போட்டியில் நியூசிலாந்து தோற்க வேண்டும். இந்த சூழ்நிலையில் இப்போட்டி நடைபெறும் பெங்களூரு நகரில் சராசரியாக 90% மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் சுவாரசியம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மதியம் 3 மணி முதல் 6 மணி வரை 90% மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இப்பபோட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஒருவேளை இப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும். அதனால் நியூசிலாந்து 9 புள்ளிகள் மட்டுமே பெறுவது பாகிஸ்தானுக்கு வாய்ப்புகளை பிரகாசப்படுத்த உள்ளது. குறிப்பாக தற்போது 8 புள்ளிகளை பெற்றிருக்கும் பாகிஸ்தான் தங்களுடைய கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தினால் 10 புள்ளிகளை பெற்று நியூசிலாந்தை முந்தி இந்தியாவுடன் செமி ஃபைனலில் மோதுவதற்கு 4வது அணியாக தகுதி பெறும்.

இதையும் படிங்க: விராட் கோலி மீதான வன்மத்துக்கு இதான் காரணமா.. 2012 பல்ப்பை தோண்டி எடுத்து.. ஹபீஸை கலாய்த்த வாகன்

அத்துடன் ஆப்கானிஸ்தானை விட சிறந்த ரன் டேட் கொண்டிருப்பதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி அதனுடைய கடைசிப் போட்டியில் வென்றாலும் பாகிஸ்தானுக்கு பிரச்சினை ஏற்படாது. ஒருவேளை இலங்கை – நியூசிலாந்து போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு பாகிஸ்தான் அதனுடைய கடைசிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றால் தங்களுடைய கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஆப்கானிஸ்தான் வீழ்த்தும் பட்சத்தில் 4வது அணியாக செமி ஃபைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement