விராட் கோலி மீதான வன்மத்துக்கு இதான் காரணமா.. 2012 பல்ப்பை தோண்டி எடுத்து.. ஹபீஸை கலாய்த்த வாகன்

Micheal Vaughan 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை விளையாடிய அனைத்து 8 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்று செமி ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. அதனால் 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்தி நிச்சயமாக 2011 போல இந்தியா கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த வெற்றிகளுக்கு பேட்டிங் துறையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடிய முக்கிய பங்காற்றி வருகிறார். குறிப்பாக இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 545* ரன்கள் குவித்துள்ள அவர் தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சதமடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தார்.

- Advertisement -

கலாய்த்த வாகன்:
ஆனால் அப்போட்டியில் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய விராட் கோலி கடைசியில் அணிக்காக அதிரடியாக விளையாடாமல் மிகவும் மெதுவாக விளையாடி சிங்கிள் எடுத்து சுயநலமாக தன்னுடைய சதத்தை தொட்டதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் முகமது ஹபீஸ் விமர்சித்தார். குறிப்பாக இந்த உலகக்கோப்பையில் கடந்த 3 போட்டிகளாக விராட் கோலி சுயநலத்துடன் விளையாடுவதாக தெரிவித்த அவர் ரோகித் சர்மா மட்டுமே தன்னலமின்றி விளையாடியதாக கூறினார்.

அத்துடன் நேற்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி கடைசியில் அணிக்காக அதிரடியாக விளையாடி சதமடித்த பென் ஸ்டோக்ஸ் தன்னலமின்றி விளையாடுபவருக்கு எடுத்துக்காட்டாகவும் விராட் கோலி சுயநலத்துடன் விளையாடுபவருக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் ஹபீஸ் அப்பட்டமாக ட்விட்டரில் விமர்சித்தார். ஆனால் அந்த 2 தருணங்களிலும் அவருக்கு இது முட்டாள்தனமான கருத்து என்று பதிவிட்டு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தக்க பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2012 டி20 உலகக் கோப்பையில் இந்தியா நிர்ணயித்த இலக்கை துரத்திய பாகிஸ்தான் 59/4 என சரிந்து தடுமாறிய போது அப்போதைய கேப்டனாக இருந்த முகமது ஹபீஸ் காப்பாற்ற போராட்டமால் விராட் கோலியின் வேகத்தில் 15 (28) ரன்களில் கிளீன் போல்டானார். அதை தற்போது தோண்டி எடுத்துள்ள மைக்கேல் வாகன் “இது தான் நீங்கள் விராட் கோலி மீது தொடர்ந்து வன்மமான விமர்சனங்களை வைப்பதற்கு காரணமா” என்று ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டு ஹபீஸை கலாய்த்துள்ளார்.

இதையும் படிங்க: நியூசிலாந்தா? பாகிஸ்தானா? ஆப்கானிஸ்தானா? இந்தியாவுடன் அரையிறுதியில் மோதப்போகும் அணி எது தெரியுமா? – விவரம் இதோ

அதற்கு இந்திய ரசிகர்கள் பாராட்டு தெரிவித்த நிலையில் தற்போது அந்த வீடியோவையும் தோண்டி எடுத்துள்ள மைக்கேல் வாகன் “இனிய காலை வணக்கம். இன்றைய நாள் நன்றாக அமையட்டும்” என்று முகமத் ஹபீஸை டேக் செய்து ஓப்பனாக கலாய்ப்பார். இந்த நிலையில் 2012 ஆசிய கோப்பையில் ஹபீஸ் அடித்த 105 ரன்களை மிஞ்சி 183 ரன்களை விளாசி பாகிஸ்தானை விராட் கோலி தனி ஒருவனாக தோற்கடித்ததும் இந்த வன்மத்திற்கு காரணம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement