நியூசிலாந்தா? பாகிஸ்தானா? ஆப்கானிஸ்தானா? இந்தியாவுடன் அரையிறுதியில் மோதப்போகும் அணி எது தெரியுமா? – விவரம் இதோ

Semi-Final
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 19-ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான அரையிறுதிக்கு இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அதிகாரபூர்வமாக தகுதி பெற்றுள்ளன. அதனை தொடர்ந்து நான்காவது இடத்திற்கான போட்டி நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே கடுமையாக நிலவி வருகிறது.

இந்த மூன்று அணிகளை தவிர்த்து இங்கிலாந்து, பங்களாதேஷ், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் அதிகாரப்பூர்வமாக இந்த தொடருக்கான அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்று உள்ள 10 அணிகளும் 8 போட்டிகளை விளையாடி முடித்துள்ள வேளையில் அனைத்து அணிகளுக்குமே தற்போது ஒரே ஒரு லீக் போட்டி மட்டும் எஞ்சியுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது இந்த தொடருக்கான புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து இந்திய அணிக்கு எதிராக அரையிறுதியில் விளையாடப்போகும் அந்த அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியுடன் மோத அதிக வாய்ப்புள்ள அணியாக நியூசிலாந்து அணியே இருக்கிறது.

ஏனெனில் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஒருபுறம் மோதும் வேளையில், முதலிடம் பிடித்த இந்தியாவும் நான்காவது இடத்தை பிடிக்கப்போகும் அணியும் மற்றொரு அரையிறுதி போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்த நான்காவது இடத்தை பிடிக்க நியூசிலாந்து அணிக்கே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஏனெனில் நியூசிலாந்து அணி தங்களது கடைசி போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள இருக்கிறது. எனவே அந்த போட்டியில் அவர்கள் எளிதில் வெற்றி பெற்றால் கூட நல்ல ரன்ரேட் அடிப்படையில் நான்காவது இடத்தினை பிடித்து விடுவார்கள்.

இதையும் படிங்க : சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரில் யார் எம்.ஆர்.எஃப் பேட்டை பயன்படுத்தி – அதிக சதங்களை அடித்தது?

ஒருவேளை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் தங்களது கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றால் அவர்கள் மிகப்பெரிய ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை நியூசிலாந்து அணி தோல்வியை சந்தித்தால் மற்ற அணிகளின் முடிவில் தான் 4 ஆவது அணி எது என்பது உறுதியாகும். ஆனால் தற்போதைய நிலவரப்படி இந்திய அணியுடன் அரையிறுதியில் மோத அதிக வாய்ப்புள்ள அணியாக நியூசிலாந்து அணியே பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement