சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரில் யார் எம்.ஆர்.எஃப் பேட்டை பயன்படுத்தி – அதிக சதங்களை அடித்தது?

Sachin-and-Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக மாபெரும் பங்களிப்பினை வழங்கினார். கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணியை கடந்த 15 ஆண்டுகளாக தாங்கி நிற்பவர் விராட் கோலி என்றால் மிகையல்ல.

ஏனெனில் ஒரு காலத்தில் சச்சின் எவ்வாறு இந்திய அணிக்காக தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ தற்போது அதேபோன்று விராட் கோலி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதோடு முறியடிக்க முடியாத சச்சினின் பல சாதனைகளை விராட் கோலி ஒவ்வொன்றாக முறியடித்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் சாதனையை சமன் செய்தார். மேலும் வெகுவிரைவாக அவர் 50-வது சதத்தையும் அடித்து சச்சினின் சாதனையை முறியடிக்கவும் காத்திருக்கிறார்.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் பயன்படுத்திய எம்.ஆர்.எப் பேட்டில் யார் அதிக சதங்களை விளாசி உள்ளார்கள் என்பதை இந்த பதிவில் காணலாம். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரராக பார்க்கப்படும் சச்சின் எம்.ஆர்.எப் பேட்டை பயன்படுத்தி மட்டும் 71 சதங்களை அடித்துள்ளார்.

- Advertisement -

கடந்த 1989-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சச்சின் 2013-ஆம் ஆண்டு ஓய்வினை அறிவித்தார். கிரிக்கெட் உலகில் நினைத்துப் பார்க்க முடியாத பல சாதனைகளை படைத்துள்ள சச்சின் இன்றளவும் கிரிக்கெட் தொடர்பான பணிகளிலேயே ஈடுபட்டு வருகிறார். அதே வேளையில் சச்சினுக்கு அடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை அடித்த வீரராக இருக்கும் விராட் கோலி கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி தற்போது வரை மிகச் சிறப்பான ஃபார்மில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : தோனிக்கு அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட சுப்மன் கில் – இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கு

அதன்படி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 79 சதங்களை விளாசியுள்ள அவர் அதில் 60 சதங்களை எம்.ஆர்.எப் பேட்டை பயன்படுத்தி அடித்துள்ளார். இந்தப் புள்ளி விவரத்தின் அடிப்படையில் சச்சின் டெண்டுல்கரே எம்.ஆர்.எப் பேட்டை பயன்படுத்தி அதிக சதங்கள் அடித்துள்ளார். அதேவேளையில் விராட் கோலி இன்னும் 11 சதங்களை இந்த பேட்டை பயன்படுத்தி அடித்தால் அவரது அந்த சாதனையையும் சமன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement