தோனிக்கு அடுத்து ஒருநாள் கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட சுப்மன் கில் – இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கு

Gill-and-Dhoni
Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்ற முடியும் கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே மூன்று வகையான தரவரிசை பட்டியலையும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடரானது நடைபெற்று வரும் வேளையில் ஒருநாள் கிரிக்கெட்க்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் வெளியாகிய பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் முதலிடம் பிடித்துள்ளது அனைவரது மத்தியிலும் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதோடு இந்த இளம் வயதிலேயே அவர் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை முதலிடத்தில் பிடித்துள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

- Advertisement -

விராட் கோலிக்கு அடுத்து இந்திய அணியை தாங்கிச் செல்லும் வீரராக பார்க்கப்படும் சுப்மன் கில் தற்போது முதல் இடத்தை பிடித்து தனது தகுதியை நிரூபித்துள்ளார். அதோடு இனி அடுத்த 10 ஆண்டுகளுக்கு இவரே இந்திய அணியின் ரன் மிஷினாக செயல்படுவார் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இனிவரும் காலங்களிலும் இவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் பல்வேறு சாதனைகளை இவர் நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணி சார்பாக விளையாடி விரைவாக நம்பர் ஒன் இடத்தை பிடித்த வீரர்கள் குறித்த ஒரு தகவலை இங்கு நாம் காணலாம்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட தோனி அறிமுகமானபோது டாப் ஆர்டரில் களமிறங்கி விளையாடி வந்தார். அந்த நேரத்தில் தோனி தான் விளையாடிய முதல் 38 ஒருநாள் போட்டியிலேயே தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்து அனைவரையும் அசரவைத்தார்.

இதையும் படிங்க : நான் சதம் அடித்ததை விட இந்த விஷயம் நடந்தது தான் எனக்கு சந்தோசம் – ஆட்டநாயகன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி

அதற்கு அடுத்து தற்போது சுப்மன் கில் 41 போட்டியில் இந்த முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். துவக்க வீரராக தற்போது களமிறங்கி விளையாடி வரும் சுப்மன் கில் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், டெஸ்ட் போட்டிகளில் சதம், டி20-யில் சதம் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் சதம் அடித்து அசத்தியுள்ள வேளையில் இனிவரும் காலங்களில் இவரது ஆட்டம் இன்னும் பிரமாதமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement